மனிதர்களின் அனுபவ ஒன்றிணைவு நிறைவுப்பகுதி - தியோ ஏஞ்சலோ பவுலோஸ்








யாரும் உங்களை நம்பிக்கையாளராக கூறுவதில்லை. படத்தில் சரஜீவோ காப்பகம் சார்ந்த இவோலெவி கூறுவதாக ‘‘ நீங்கள் ஏற்றுக்கொண்டு செய்யும் பயணமானது ஒரு துண்டு படச்சுருளுக்கானது. இதில் முழுக்க நம்பிக்கை கொள்ளலாம். அல்லது முழுக்க விரக்தியுள்ள நிலைமையில் வீழலாம்’’ என்று கூறுகிறார். இந்த நயமற்ற காட்சி வரும் நூற்றாண்டின் இறுதியில் விரக்தி அல்லது நம்பிக்கை என எதனை இக்காட்சி குறைந்தபட்சம் வெளிப்படுத்துகிறது?

            நான் இந்த நம்பிக்கை அல்லது நம்பிக்கையற்ற என்ற விஷயங்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் சமகாலத்தின் மீதான நேர்மையான பதிவுகளைத்தான் உருவாக்க முயற்சிக்கிறேன். நம்பிக்கையாளர்கள் உண்மைக்கு என்றும் முதுகு காட்டியே நிற்கின்றனர். நம்புகின்ற விஷயங்கள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று தவறான காரணங்களை அவர்கள் உருவாக்கிக்கொள்கிறார்கள். நம்பிக்கையற்றவர்களின் இறுதி முடிவாக தற்கொலை என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிவாக உள்ளது. எனது படத்தின் இறுதியில் கதாபாத்திரங்களின் பயணம் முடிவுறாது தொடர்கிறது என்று கூறுகிறார்கள். இதன் அர்த்தம் என்னவெனில் அவர்கள் தொடர்ந்து தமது வீட்டைத் தேடுவார்கள் என்பதுதான். (‘‘நமது வீட்டைச் சென்றடைய இன்னும் எத்தலை எல்லைகளைத் தாண்டிப் போகவேண்டும்’’ என்னும் வசம் நாரையின் தடை செய்யப்பட்ட பாதை படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும்) வீடு என்பது நமக்கு நம்பிக்கை அளிக்கிறதாகவும், அமைதி தருவதாகவும் இளைப்பாறுவதற்கான இடமாகவும் உள்ளது. தேடுதல் முடிவதில்லை. படமும் முடிவதில்லை. ஸ்வீடன் நாட்டு நாவலாசிரியரான லார்ஸ் குஸ்பாவ்ஸன் ‘‘நாம் தோல்வியை ஒப்புக்கொள்ளக்கூடாது. தொடர்ந்து பயணிக்க வேண்டும்’’ என்று கூறியது நினைவுக்கு வருகிறது.

அரசியல் மற்றும் பயணங்களின் மீதான உங்களின் ஆர்வத்தைப் பற்றி விளக்குங்கள். இப்படமும் பயணம் குறித்ததுதானா? பால்கன் மக்களை அவர்களிடத்திற்கு சென்று படம் பிடித்தீர்களா? எ.கா. சரஜீவோ காட்சி அங்கு படம் பிடிக்கப்பட்டதுதானா?

      அரசியல் மற்றும் பால்கன் குறித்த எனது ஆர்வம் எளிதில் விளக்கி விடக்கூடிய ஒன்றே. சரஜீவோவில் நடந்த தனிச்சிறப்பான விஷயங்கள் இந்த நூற்றாண்டில் வரலாற்றில் முக்கியமானது என்பதை உணரலாம். அதன் இறுதியில் சரஜீவோவில் மீண்டும் நிற்கிறோம். இவையே நாம் எதன் நீட்சியாக தோற்றோம் என்பதைக் கூறுகிறது. பால்கனில் வாழ்க்கை, அங்கு நிகழும் நிகழ்வுகள் குறித்து கூடுதல் நெருக்கத்தை கவனத்தை மற்ற ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும கொண்டிருக்கிறேன். சரஜீவோவில் நான் படம் பிடிக்க விரும்பினாலும் அது நடக்காத ஒன்று. அங்கு செல்வதற்காக அனைவரும் தயாராகி நின்று, அனகோனா விமானத்திற்காக காத்திருந்தோம். எங்களுக்கு முன் கிளம்பிச் சென்ற விமானம் அப்பகுதியில் போர் நடப்பதால் திரும்பி வந்துவிட்டது.  போர் தொடர்ந்து நடந்து நகரம் முற்றுகைக்கு உள்ளாவதை சிறப்பான முறையில் படமாக்குவது என்பதை விட சரஜீவோ பகுதி குறித்த கருத்தியல் முக்கியத்துவத்தை உணர்ந்தேன்.  சரியான இடத்தில் காட்சிகளை எடுக்க முனைந்தாலும் அங்கே உற்சாகம் போதாமையாக உள்ளது. மோஸ்டார், வ்யூகோவார் எனும் போரினால் கடுமையாக பாதிக்கப்பட்ட இரு வேறு இடங்களில் படப்பிடிப்பை நடத்தினோம்.