தேசிய கலாச்சாரம் மற்றும் தனிப்பட்ட பார்வை 12
12
தேசிய கலாச்சாரம் மற்றும்
தனிப்பட்ட பார்வை
ஆண்ட்ரூ ஹார்டன் – 1992
ஆங்கில மூலம் - டேன் ஃபைனாரு
தமிழில் லாய்ட்டர் லூன்
உங்களது அண்மைய
படமான ’தி சஸ்பெண்டட்
ஸ்டெப் ஆப் தி ஸ்டோர்க்’ படத்தில்
எல்லைப்புறங்கள், அகதிகள், சோவியத் ரஷ்யாவில் கம்யூனிசம் வீழ்ந்ததால் கிழக்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த
பார்வையைக் கொண்டிருக்கின்றன. அகதிகள் விவகாரத்தில் அப்படி என்ன ஆர்வம்
உங்களுக்கு?
மார்செலோ மாஸ்ட்ரோயன்னி முக்கிய
கதாபாத்திரமாக படத்தில் நடித்திருப்பார். அவர் கூறுவதாக, ‘அகதி என்பவனின்
ஆழ்மனதில் நிகழும் விஷயங்கள் வெளிப்புறத்தில் நிகழ்வதைக்காட்டிலும் தீவிரமானது’, நாம் எல்லைகளைக் கடந்து விட்டோம். ஆனால்
நாம் இங்கேயே இருக்கிறோம். எத்தனை எல்லைக்கோடுகளைக் கடந்து சென்றால் நாம் வீட்டினை
அடைவோம்? என்று ஒரு வசனம் வரும்.
நீங்கள் தற்போதைய நிலைமையை கிரீசின் வடக்குப் பகுதியான முன்னாள்
யூகாஸ்லேவியாவின் நாட்டினைக் குறித்துக் கூறுகிறீர்களா?
20 ஆம் நூற்றாண்டின் இறுதியில் நாம் ஏன் ஒருவரை ஒருவர் கொல்ல
முயற்சிக்கிறோம் என்பது புரிந்து கொள்ள முடியாததாகவே இருக்கிறது. எங்கும் உள்ள
அரசியல்வாதிகள் இது குறித்து உண்மையிலேயே கவனம் கொள்கிறார்களா? பல நாடுகள் கிரீஸ்
உட்பட கொலை செய்யப்படும் அப்பாவி மக்களின் மீது அரசியல்வாதிகள் மேலே ஏறி பலன்களைப்
பெறுகின்றனர். தம் வீடுகளை விடுத்து வெளியேற முயன்ற அல்பேனியர்கள் படுகொலை
செய்யப்பட்டனர் என்பதை குறிப்பிட விரும்புகிறேன். இது அரசியல் முக்கியத்துவம்
வாய்ந்த ஒரு நிகழ்ச்சியாகும். தொலைநோக்குப் பார்வை கொண்ட புதிய அரசியல் உலகில்
உருவாகி வரவேண்டும் என்பது எனது ஆசை. பொருளாதாரம், ராணுவம் இவற்றை
சமநிலைப்படுத்தும் எளிய விஷயமாக அரசியல் இருக்காது. மக்களுக்கிடையேயான
தொடர்புகொள்ளக்கூடியதாக புதிய வடிவமாக அது இருக்கும்.
உங்களுடைய
படங்கள் நீளமான காட்சிகள் வழக்கத்திற்கு மாறானவை. அவற்றை எப்படி
காட்சிப்படுத்தியிருப்பீர்கள் என்று கற்பனை செய்து பார்ப்பது கடினமானதாக
இருக்கிறது. படப்பிடிப்பு இடங்களில்தான் அதில் மாற்றங்களை செய்தீர்களா? படத்தினை
எப்படி மேம்படுத்துகிறீர்கள்?
என்னுடைய முதல்படம் மறுகட்டமைப்பு 100
சதவிகிதம் சூழல்களைச் சார்ந்தே எடுக்கப்பட்ட படம். இரண்டாவது படமான ’36 நாட்களில்’ படமானது திரைக்கதைக்கு மிக நெருக்கமாக அமைந்த படமாகும். ‘பயணிக்கும் வீரர்கள்’ படம் ஏகப்பட்ட மேம்படுத்தல்களை படப்பிடிப்புத்
தளத்தில் கொண்டே உருவானது. உ.தா: இரண்டு வேறுபட்ட அரசியல் கட்சிகள் தங்களுக்குள்
பாடல் வழியே சண்டையிடும் காட்சியினை படம் பிடிக்க ஏகப்பட்ட மணி நேரங்கள் ஒத்திகை
பார்த்தோம். இன்னொரு காட்சியில் நடிகர்கள் குழுவாக சாலையில் பாடிக்கொண்டு
நடந்துசெல்லும்போது, பனி ஒவ்வொருவருக்கும் இடையில் செல்வது போல் காட்சி
அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் கதையில் இதுகுறித்து எந்தக் குறிப்பும் இருக்காது.
ஆம், நான் இடங்களுக்கு அதிக மதிப்பினை முக்கியத்துவத்தினை கொடுக்கிறேன்.
நடிகர்களோடு இணைந்த நிலப்பரப்பை கவனமாக காட்சிபடுத்துகிறேன்.
திரைக்கதையே அடிப்படை பிறகு
மேற்கொள்ளும் விஷயங்கள் அதன் கிளைகள் என்று கூறலாம். ‘மூடுபனிநிலம்’ திரைப்படம் கதைக்கு மிக நெருக்கமானது. ‘சிதெராவிற்குப்
பயணம்’ என்பது இதற்கு அப்படியே எதிரானது. திரைப்படம்
உருவாக்குவது குறித்த திரைப்படம் அது. வேலை நடந்துகொண்டிருக்கிறது என்று நமக்கு தெரிவிக்கிற
படம் எனலாம். அக்காட்சியின் இறுதியில் முக்கிய கதாபாத்திரமும், அவரது மனைவியும் கட்டுமரத்தில்
செல்வதாக காட்சி மேம்படுத்தப்பட்டது.
அமெரிக்க முறையில் படப்பிடிப்பு,
கதை எழுதுவது ஆகியவற்றிலிருந்து பெரிதும் வேறுபட்டவர் நீங்கள் என்றாலும், அமெரிக்க
சினிமாவை பாராட்டுகிறீர்கள் எப்படி?
ஒருவன் சிறுவயதில் சினிமா குறித்து ஆர்வம் கொள்ளும் விதமாக அமைந்திருப்பது
மேற்கத்திய இசை, தாதா கும்பல் குறித்த படங்கள்தான். உணர்ச்சிகரமான படங்கள் எனக்கு சிறிதளவே
பிடிக்கும். ஜான் ஃபோர்டு, மைக்கேல் கர்டிஸ், மின்னெலியின் இசை எனக்கு மிகவும் பிடித்தமானது.