ஆல் நியூ அறிவியல் - தொகுப்பு: விஷ்வேஷ் பானர்ஜி



ஆல் நியூ அறிவியல் - தொகுப்பு: விஷ்வேஷ் பானர்ஜி

இத்தாலியின் சைக்கிள் டூரிஸம்!

இத்தாலியின் ரிசார்ட் ஒன்று மலைப்பாதையில் சைக்கிள் ஓட்ட சுற்றுலா பயணிகளை ஊக்கப்படுத்துகிறது. 3 நாட்கள் சைக்கிள் மட்டுமே அங்கு ஓட்டுவதற்கான ஏற்பாடுகளை இந்த ரிசார்ட் கவனிக்கிறது. யுனெஸ்கோவின் அங்கீகாரம் பெற்ற பாரம்பரிய இடமான இங்கு, ரிசார்ட்டுகளின் எண்ணிக்கை அதிகம்.

31 ஆவது ஆண்டாக மாரடோனா லெஸ் டோலமைட்ஸ் எனும் நிகழ்வில் ஏராளமான மக்கள் பங்கேற்று சைக்கிள் ஓட்டி மகிழ்கிறார்கள். இதில் புரொபஷனல் வீரர்கள் டூ அமெச்சூர் வீரர்கள் வரை உண்டு. இது இந்நிகழ்விற்கு கூடுதல் கலர் சேர்க்க இப்போது இங்கு சீஸனில் கூட்டம் அள்ளுகிறது. 28 ஆயிரம் சைக்கிள் வீரர்கள் 160கி.மீ ரைடு அடித்து பிரமிக்க வைத்துள்ளார்கள். இங்கிலாந்து, ஐரோப்பாவிலும் இதுபோன்ற சைக்கிள் ரைடு உண்டு என்றாலும் இந்த அளவு பிரமாண்டம் இல்லை. ஆனால் அதிகளவில் சைக்கிள் வீரர்களின் வருகை இடத்தை மாசுபடுத்தும் என்கிற உண்மையையும் மறுக்க முடியாது. காலை 10- 3 மணிவரை சாலை போக்குவரத்து அகற்றப்பட்டு 51 கி.மீ சைக்கிள் பயணத்திற்கு ரெடியாகிறது. இதில் 1300 மீட்டர் மலையேற்றமும் உண்டு.  

 ஆபரேஷனுக்கு உதவிய நத்தை!

நத்தை ஊர்ந்து செல்லும் தடத்தை பார்த்தால் கூகுள்மேப் இல்லாமலேயே அது எங்கே சென்றிருக்கிறது என கண்டுபிடித்துவிடலாம். எப்படி? ஸ்பைடர்மேன் போல செல்லுமிடமெல்லாம் பசையை தடவி வைத்து நகர்வதை வைத்துதான்.

ஹார்வர்டு பல்கலை ஆராய்ச்சியாளரான ஜியான்யூ லீ தலைமையிலான குழுவினர், நத்தையின் பசையைப் போன்ற ஒட்டும் தன்மையில், ஆபரேஷனில் பயன்படுத்தும் பசையை உருவாக்கி வருகிறார். ஹைட்ரோஜெல்லின் அடிப்படை நீர்தான். மேற்பரப்பில் பாலிமர் இழையும், இரண்டாவது அடுக்கில் நெகிழ்வான தன்மை கொண்ட இழைகளும் அமைந்த பசை இது. உடலின் ஈரமான பரப்பில் பசையை பயன்படுத்தினால், எலக்ட்ரான்கள் மற்றும் பாலிமர்கள் செல்களிடையே நிகழ்த்தும் கெமிஸ்ட்ரியால் தோலினை கசிவின்றி இறுக்கமாக பிணைக்கிறது. Tealblue, Dark blue என இருவகைகளில் கிடைக்கும் இந்த பசை இதயம், கல்லீரல் ஆகிய தசைகளிலும் உலர்வான, ஈரமான தோல்களிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளது. நச்சுத்தன்மையில்லா பசை இது.
�் பயணத்திற்கு ரெடியாகிறது. இதில் 1300 மீட்டர் மலையேற்றமும் உண்டு.  


 எலும்பை இணைக்கும் பயோகிளாஸ்!

இங்கிலாந்தின் லண்டனிலுள்ள இயான் தாம்சன், கார்விபத்தில் தலையில் அடிபட்டு கண்ணில் நிறத்தை பிரித்தறிய முடியாத நிலைமைக்கு சென்ற பேஷண்ட் ஒருவருக்கு சிகிச்சை செய்து வந்தார். மார்பெலும்பை பயன்படுத்தி கண்களை மண்டையோட்டில் சரியாக பொருத்த முயன்ற அத்தனை முயற்சிகளும் தோல்வி.

இதற்கு தாம்சனின் தீர்வு பயோகிளாஸ். "சாதாரண ஜன்னல் கண்ணாடியை உடம்பில் வைத்தால் அதனை நாம் வெளியேற்றும் நிலை ஏற்படும். பயோகிளாஸ் உடம்பில் புதிய எலும்பை உருவாக்குகிறது" என்கிறார் இம்பீரியல் கல்லூரி ஆராய்ச்சியாளர் ஜூலியன். 100 பேஷண்டுகளுக்கு இம்முறையில் தீர்வளித்திருக்கிறார் தாம்சன். அமெரிக்காவின் லாரி ஹென்ச் என்ற விஞ்ஞானியால் பயோகிளாஸ் கண்டறியப்பட்டது 1969 ஆம் ஆண்டு. போர்வீரர்களின் உடைந்த மார்பெலும்புகளை சீரமைக்கும்போது லாரி கண்டறிந்ததுதான் பயோகிளாஸ். எதிர்காலத்தில் இன்னும் பல துறைகளில் பயோகிளாஸ் பயன்படக்கூடும்.


 டோங்கா பீன்சுக்கு தடை ஏன்?

உலகிலேயே அமெரிக்காவால் அதிகம் இறக்குமதி செய்யப்படும் பொருள் டோங்கா பீன்ஸ் எனும் நறுமணப்பொருள். 1954 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்காவில் டோங்காபீன்ஸை உணவுப்பொருளாக பயன்படுத்த தடையுள்ளது ஏன்? ஐஸ்க்ரீம், புகையிலை ஆகியவற்றில் ஃப்ளேவராக பயன்படும் டோங்கா பீன்ஸில் 'குமாரின்' வேதிப்பொருளின் நச்சுதான் தடைக்கு காரணம்.

குமாரின், லாவண்டர், செரி ஆகியவற்றிலும் உண்டு. 1820 ஆம் ஆண்டு டோங்கா பீன்சிலிருந்து குமாரின் தனியாக பிரிக்கப்பட்டு கண்டறியப்பட்டது. 1940 இல் செயற்கையாக தயாரிக்கப்பட்ட குமாரின் புகையிலை, ஐஸ்க்ரீம், குளிர்பானங்களில் மணத்திற்காக சேர்க்கப்பட்டது. குமாரின் ஆல்கஹால் கல்லீரலை எப்படி சிதைக்கிறதோ அதைப்போலவே பாதிக்கிறது. மனிதர்களை மட்டுமல்ல, பசுக்களையும் கொல்லக்கூடியது. உலகில் கல்லீரல் பாதிப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை 2%. இதில் குமாரின் பாதிப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்க சான்ஸ் உண்டு.

 மகளுக்காக கட்டிய தீம்பார்க்!-

அமெரிக்காவின் டெக்சாஸைச் சேர்ந்த தந்தை ஒருவர் தன் மகளுக்காக என்ன செய்திருக்கிறார் தெரியுமா? பிரமாண்ட தீம் பார்க்கையே உருவாக்கியிருக்கிறார்.

தன் மகள் மோர்கனை லீவில் தீம்பார்க் ஒன்றுக்கு கார்டன் ஹர்ட்மன் அழைத்துச் சென்றார். அங்குள்ள குழந்தைகளுடன் நீந்தி விளையாட மோர்கன் விரும்பினாலும், அவளது ஆட்டிச இயல்பினால் பலரும் விலகிச்செல்ல தவித்துப்போனார் கார்டன். 2010 ஆண்டு தன் செல்லமகளுக்காக அவர் உருவாக்கியதுதான் கார்டன் வொண்டர்லா தீம்பார்க். செலவு 34 மில்லியன் டாலர்கள். உடல் குறைபாடுள்ளவர்களுக்கான விசேஷ வசதிகள் இதன் ஸ்பெஷல்.

மாற்றுத்திறனாளிகளுக்கு தீம்பார்க்கில் இலவச என்ட்ரி உண்டு. ஆண்டுதோறும் இந்த தீம்பார்க்கால் 1 மில்லியன் டாலர்கள் நஷ்டம்தான். எனினும் அதனை சமாளிக்க நண்பர்கள், அமைப்புகள் உதவுகின்றனர் என்கிறார் கார்டன். 67 நாடுகளிலிருந்தும் 1 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இதனை சுற்றிப்பார்த்துள்ளனர்.

  
 கண்நோய் அறியும் சூப்பர் ஆப்!

நீரிழிவால் ஏற்படும் பார்வைக்குறைபாடுக்கு டயாபடிக் ரெடினோபதி என்று பெயர். ரெட்டினாவிலுள்ள ரத்தநாளங்கள் சிதைவடைவதால் பார்வை பாதிக்கப்படும் நிலை. தற்போது ரத்தநாளங்களை சோதிக்கும் எளிய முறையை காவ்யா கொப்பாராபு என்ற சிறுமி கண்டுபிடித்துள்ளார்.

தன் தாத்தாவுக்கு இம்முறையை பரிசோதித்து வெற்றி கண்டுள்ளார் காவ்யா. "நோயை சரியான முறையில் கண்டறிவதுதான் இன்றும் பெரிய சவால். இந்தியா போன்ற நாடுகளில் கிராமங்களிலுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை செய்ய கண் மருத்துவர்கள் தேவை" என்கிறார் காவ்யா. Eyeagnosis என்று பெயரிடப்பட்ட ஸ்மார்ட்போன் ஆப்பின் மூலம் நோயை கண்டறிய முடியும் என்கிற இவர், இந்த ஆப்பை நியூயார்க்கில் நடந்த ஓரெய்லி செயற்கை அறிவு மாநாட்டில் காட்சிபடுத்தியுள்ளார். நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த்தின் தகவல் தளத்தில் 34 ஆயிரம் ரெட்டினா படங்களை பெற்று ஆப்புடன் இணைத்து அதனை எளிதில் கண்டறிய உழைத்துள்ளார். பெண்கள் கம்ப்யூட்டர் லீக் என்ற பெயரில் ஏழை குழந்தைகளுக்கு கணினி கோடிங் எழுதும் வகுப்புகளையும் நடத்திவருகிறார் காவ்யா.

நன்றி: முத்தாரம் வார இதழ்