பசுமை பேச்சாளர்கள் 20 எலன் மஸ்க் ச.அன்பரசு
பசுமை பேச்சாளர்கள் 20
எலன் மஸ்க்
ச.அன்பரசு
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபரான எலன்
மஸ்க் எலக்ட்ரிக் கார் கம்பெனியான டெஸ்லா, விண்வெளி ஆராய்ச்சி
நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவர்.
தென் ஆப்பிரிக்காவின் பிரிடோரியாவில் பிறந்த(1971,ஜூன் 28) எலன் மஸ்க், சின்னச்சின்ன
ஸ்டார்ட் அப் ஐடியாக்கள் மூலமே பெத்த பில்லியனர் ஆனவர். பத்து
வயதிலேயே கம்ப்யூட்டரில் ஆர்வமாகி, தானாகவே ப்ரோகிராம் கற்று
பிளாஸ்டர் என்ற கேம் சாப்ட்வேர் தயாரித்தார். 1989 இல் தென் ஆப்பிரிக்க
மிலிட்டரியில் சேர விருப்பமின்றி, கனடாவுக்கு சென்ற எலன்,
1992 ஆம் ஆண்டில் பென்சில்வேனியாவில் இயற்பியல் படித்தார்.
"ராணுவப்பணியில் ஆர்வமுண்டுதான் ஆனால் கருப்பின மக்களை ஒடுக்குமுறைக்கு
உட்படுத்தும் தென் ஆப்பிரிக்க ராணுவப்பணி வேண்டாம் என தவிர்த்தேன்" என்கிற எலன் மஸ்க், Zip2 கார்ப்பரேஷன் தொடங்கி நியூயார்க்
டைம்ஸ், சிகாகோ ட்ரிப்யூன் செய்திகளை தரும் நிறுவனமாகி வளர்த்து,
காம்பேக் நிறுவனத்திடம் விற்றார். பின் பேபால்
ஆன்லைன் பேமெண்ட் நிறுவனத்தை தொடங்கிய தொலைநோக்கு மனிதர் எலன் மஸ்க்.
2003 ஆம் ஆண்டு கலிஃபோர்னியாவின் பாலோ ஆல்டோவில்
தொடங்கிய எலக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லாவின் இன்றைய மதிப்பு 7 பில்லியன் டாலர்கள். 2008 இல் Roadster கார் 60 கி.மீ ஸ்பீடை
3.7 நொடிகளில் எட்டி சாதித்தது.சூழலைக் கெடுக்காத
டெஸ்லா கார்கள் ஒருமுறை சார்ஜ் செய்தால், 426 கி.மீ சாலிடாக செல்லும் சக்திமான் காரை உருவாக்கி உலகையே ஆச்சரியப்படுத்தினார்.
"சூழல் குறித்த அதிக கவனம் கொண்டவன். தொழில்நுட்ப
கண்டுபிடிப்புகளிலும் அதற்கே முதலிடம்" என தன்னம்பிக்கையோடு
அடுத்த தலைமுறைக்காக ஹைப்பர்லூப் போக்குவரத்து, ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி
ஆராய்ச்சி என சளைக்காமல் புதியன விரும்பும் மனிதர் இவர்.
டெஸ்லா கார் தயாரிப்போடு சோலார் பேனல், சோலார் கூரை, பவர் வால் என பல்வேறுசூழல் தயாரிப்புகளிலும்
ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார் எலன். எலக்ட்ரிக் கார் என்றால் கண்காட்சியில்
பார்த்ததை நிலையை மாற்றி உலகெங்கும் பிரபலப்படுத்தி, அதற்கான
சார்ஜிங் பாய்ண்டுகளை வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா ஆகிய பகுதிகளில் ஏற்படுத்தி தன் செயல்வழியாக மாசற்ற தொழில்நுட்பங்களை
பலருக்கும் பிரசாரம் செய்து வருகிறார் சூழல் தொழிலதிபர் எலன் மஸ்க்.
நன்றி: முத்தாரம் வார இதழ்