ஆல் நியூ அறிவியல் - ச.அன்பரசு
ஆல் நியூ அறிவியல் - ச.அன்பரசு
சைகைகளை எழுத்துக்களாக்கும்
ஸ்மார்ட் க்ளவுஸ்!
மொழி ஜோதிகா, பிருந்தாவனம்
அருள்நிதிபோல ஒரு கேரக்டரிடம் மாட்டிக்கொண்டால் என்ன செய்வீர்கள்? அன்பும் பிரியமுமாக அவர்கள் சைகையில் பேசும்போது அதை எழுத்துக்களாக மாற்றித்தந்து
அவர்களின் மொழியை நாம் புரிந்துகொள்ள உதவுவதே இந்த ஸ்மார்ட் க்ளவுஸ் ஸ்பெஷல்.
2012 ஆம்
ஆண்டு மைக்ரோசாஃப்ட் எனேபிள்டாக் என்ற பெயரில் புதிய க்ளவுஸ்களை அறிமுகப்படுத்தியது.
அடுத்து லண்டனைச்சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சைன்லாங்குவேஜ் க்ளவுவ் என்பதை
கண்டுபிடித்தனர். இதன்மூலம் அகச்சிவப்பு கதிர்களைப் பயன்படுத்தி
சைகைகளை பேச்சாகவும் எழுத்தாகவும் மாற்றிக்கொள்ள முடியும். இந்த
லெதர் க்ளவுஸில் 9 நெகிழ்வுத்தன்மை கொண்ட சென்சார்கள் உள்ளன.
ஒரு விரலுக்கு 2 சென்சார்கள் கட்டைவிரலுக்கு ஒரு
சென்சார் என அமைக்கப்பட்டு, அமெரிக்க சைகைமொழிக்கு ஏற்ப இந்த
க்ளவுஸ் செயல்படும். பைனரி முறையில் செயல்படும் இந்த க்ளவுஸ்
தான் மொழிபெயர்க்கும் சைகைகளை எழுத்துக்களாக ப்ளூடூத் முறையில் ஸ்மார்ட்போனுக்கு அனுப்பிவிடும்.
"பேச முடியாதவர்களுக்கு பயன்படுவதோடு, எதிர்காலத்தில்
விர்ச்சுவல் ரியாலிட்டி, கேம்ஸ் போன்ற துறைகளிலும் இவை அதிகம்
பயன்படும்" என்கிறார் ஆராய்ச்சியாளர் டிமோத்தி ஓ கானர்.
மறைந்துபோன கணித
பெண் மரியா!
மரியா மிர்ஸாகானி
கடந்த
2014 ஆம் ஆண்டு கணிதத்தில் உயரிய
நோபலுக்கு நிகரான விருதை பெற்று சாதித்த இரானிய பெண் ஆவார். அண்மையில்
மார்பக புற்றுநோயால் தன் 40 வயதில் மரணித்த மரியம் மிர்ஸாகானி,
உலகம் வியக்கும் முக்கியமான கணிதவியலாளர்.
மிர்ஸாகானி moduli spaces,
Teichmuller theory, hyperbolic geometry, Ergodic theory, symplectic geometry உள்ளிட்ட கணக்கு வகைகளில் தனித்திறன் கொண்டிருந்தார். ஜியாமெட்ரிக், உருளைகளின் வளைந்த பகுதி குறித்த இவரது
விளக்கங்கள் மிகவும் புகழ்பெற்றது. ஈரானின் டெஹ்ரானில் பிறந்த
மரியம், பின்னர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு
2008 ஆம் ஆண்டு ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிக்கு
சேர்ந்தார். கணிதத்தில் புகழ்பெற்றாலும், எழுத்தாளராகவே மரியம் விரும்பியிருக்கிறார்.
"நீங்கள்
ஒரு காட்டுக்குள் தொலைந்து விடுகிறீர்கள். உங்களின் அத்தனை பலத்தையும்
ஒன்றுதிரட்டி அங்கிருந்து வெளியேற முயற்சி செய்வீர்கள் அல்லவா? அவ்வளவுதான் கணக்கு" என அட்டகாச மேத்ஸ் மந்திரம்
சொல்லியிருக்கிறார் மரியம். பலகோடி மாணவர்களுக்கு மரியம் தன்
கணிதவியல் விளக்கங்களின் மூலம் இன்ஸ்பிரேஷனாக இருந்து காட்டிலிருந்து நாம் வெளியேற
உதவி செய்வார்.
புதுமையான மல்டி
எலிவேட்டர்!
பாதாள ரயில் கேட்க
நன்றாக இருந்தாலும் அதற்கு இறங்கிச்செல்லும் படிக்கட்டுகள்தான் பரிதாபம் தரும். பெரும்பாலும்
லிஃப்ட்கள் வேலை செய்யாது என்பது நம் நாட்டு சிறப்பு. நியூயார்க்கில்
180 அடி தூரமாகவும், லண்டனில் 200 அடி தூரமாகவும் ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளது. வெஸ்டன்
வில்லியம்சன் என்பவர் Thyssenkrupp என்ற ஜெர்மனி நிறுவனத்திற்காக
மல்டி என்ற எலிவேட்டர் சிஸ்டத்தை கண்டுபிடித்துள்ளார். இந்த எலிவேட்டர்
இடதுபுறம் வலதுபுறம் என நகர்ந்து மேல்நோக்கி செல்வது இதில் புதுசு.
இந்த புதுமையான
லிஃப்டை சோதிக்க,
800 அடி உயரத்தில் அமைத்து ஆய்வு செய்து வருகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
இடது, வலது என நகர்வதற்காக காந்த காயில்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஒரு கேபினில் 10 நின்றுகொண்டு பயணிக்கலாம் என்பதோடு
மக்கள் பெருக்கத்திற்கும் இது ஒரு தீர்வு. 15-30 நொடிகளுக்கு
ஒரு எலிவேட்டர் என நெருப்பாக வேலை செய்யும். கூட்டம் இல்லாதபோது
சில எலிவேட்டர்களுக்கு தற்காலிகமாக லீவு கூட கொடுத்துவிடலாம். நேராக எலிவேட்டரில் ட்ரெயின் அருகே போய் இறங்குவதோடு, இந்த எலிவேட்டர் அமைக்க தேவையான இடமும் குறைவு. எதிர்காலத்தில்
இந்த மல்டி எலிவேட்டர் அமைவதற்கான சான்ஸ் உண்டு.
கூகுள்கிளாஸ் 2.0 அவதாரம்!
அயர்ன்மேன் படத்தில்
டோனி ஸ்டார்கின் கண்முன்னே கம்ப்யூட்டர் உயிர்பெற்று ஓடுவதுபோல செர்ஜி பிரினின் கனவுத்
திட்டமான கூகுள் கிளாஸ் எக்கச்சக்க பில்டப்புகளை ஆரம்பத்தில் கிளப்பினாலும், பிராக்டிகலாக
பயன்படும் கண்ணாடிகளை கூகுள் என்டர்பிரைஸ் எடிஷனில் தற்போது வெளியிட்டுள்ளது.
ஜிஇ, போயிங், டிஹெச்எல், ஃபோக்ஸ்வாகன் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தன்னுடைய என்டர்பிரைஸ் எடிஷன் கண்ணாடிகளை
வழங்கி அதன் தன்மையை சோதித்து பார்க்கவுள்ளது. அடுத்ததாக மருத்துவத்துறையிலும்
என்டர்பிரைஸ் எடிஷனை பயன்படுத்தும் திட்டம் ஆல்பபெட் நிறுவனத்துக்கு உள்ளது.
அண்மையில் நடத்தப்பட்ட
ஃபாரெஸ்டர் ஆய்வில்
2025 ஆம் ஆண்டு அமெரிக்காவில் 14.4 மில்லியன் தொழிலாளர்கள்
ஸ்மார்ட் கிளாஸ் அணிந்திருப்பார்கள் என்ற தகவல் வெளியானது. கூகுள்
கிளாஸ் 2012 ஆம் ஆண்டு I/O மாநாட்டில் முதல்முறையாக
அறிமுகமானது. டைம் அதனை அந்தாண்டின் முக்கியமான பொருளாக அங்கீகரித்ததை தொடர்ந்து இங்கிலாந்து மன்னர் சார்லஸ் டூ பாடகி
பியான்ஸ் வரை அதனை அணிந்து பார்க்க ஆசைப்பட்டனர். ஆனால் பேசும்
அனைத்தும் வீடியோவாக ரெக்கார்டானதால் பீதியான மக்கள் கூகுள் கிளாஸை புறக்கணிக்க படுதோல்வியானது.
கண்ணாடி அணிவது போட்டோ எடுப்பது சரி, தொழிலாளர்களுக்கு
இது எவ்விதத்தில் உதவும் என்பது கூகுளுக்கு தெரியாது என்பதை என்ன சொல்ல? பல்வேறு நிறுவனங்கள் இதனை வாங்கி கஸ்டமைஸ்டு செய்து தேவையான சாப்ட்வேர்களை
இணைத்து பணிபுரிவதையும் கூகுள் கவனித்து வந்தது.
புதிய என்டர்பிரைஸ்
கண்ணாடியில் வைஃபையில் திகுதிகு வேகம், அழைப்புகளுக்கு தனி பேட்டரி,
லைட்வெயிட், 8MP கேமரா, வீடியோ
எடுக்கும்போது பச்சை நிற விளக்கு எரிவது முடிந்தவரை முன்னர் வெளியிட்ட கண்ணாடிகளை விட
தரமான கண்ணாடிதான் இது. விவசாய பொருட்களை தயாரிக்கும்
ACGO நிறுவனம் கூகுள் கிளாஸ் போன்ற தொழில்நுட்பம் நிச்சயம் தங்களுடைய
வேலை நேரத்தை குறைக்கும் என நம்புகிறது. ஒரு கிளாஸூக்கு
1300-1500 டாலர்களை செலவழித்திருக்கிறது இந்த நிறுவனம். நாங்கள் ரோபாட்டுகளை பயன்படுத்துவதை விட தொழிலாளர்களின் திறனை இதுபோன்ற கண்ணாடிகள்
மூலம் மேம்படுத்தினாலே போதும் என நம்புகிறோம் என்கிறார் தொழிற்சாலையின் அதிகாரியான
பெக்கி க்யூலிக். 70 நிமிஷங்கள் தேவைப்படும் வேலையை கூகுள் கிளாஸ்
அணிந்து செய்தால் 5 நிமிடத்ததில் முடிக்கலாம் என்பது பிளஸ்தானே!
"முதலில்
நான் என் வேலையில் பிரச்னையை பார்த்தால், பேப்பரில் எழுதி வைத்து
பின் கம்ப்யூட்டரில் வந்து அதனை டைப் செய்வேன். இன்று பிரச்னை
என்றால், அதனை உடனே சரி செய்ய முடிகிறது. பாத்திரங்களை துலக்கியபடியே இமெயில் செக் செய்கிற அளவு எனக்கு கூகுள் கிளாஸ்
வசதியாக இருக்கிறது" என்கிறார் பேக்டரியில் வேலை செய்யும்
கென் வீன்.
ஸ்டெம்செல் பிஸினஸ்!
ஸ்டெம்செல்களை 21 வயது
வரை பாதுகாக்க செலவாகும் தொகை ரூ. 5 ஆயிரத்திலிருந்து
5 லட்சம்.
ஸ்டெம் செல் தெரபிக்கான
கட்டணம்
3 லட்சத்திலிருந்து 12 லட்சம் வரை.
ஸ்டெம்செல்களை
ஒரு குடும்பத்தினர் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு 1:40,000.
ஸ்டெம்செல் பயன்படுத்தும்
உரிமை பெற்ற வங்கிகளின் எண்ணிக்கை 21. உரிமம் பெறாத வங்கிகளின் எண்ணிக்கை
500.
15 கிலோ
எடையுள்ள ஒருவருக்கு தேவைப்படும் ஸ்டெம் செல்கள் எண்ணிக்கை 500 மில்லியன்.
ஸ்டெம்செல் தெரபியால்
குணமாகும் அரிய நோய்களின் எண்ணிக்கை 5.
நன்றி: முத்தாரம் வார இதழ்