விநோதரச மஞ்சரி - ரோனி ப்ரௌன்


விநோதரச மஞ்சரி - ரோனி ப்ரௌன்



மட்டன் சமோசாவால் லட்சாதிபதி

எம்பிஏ படித்தவருக்கு என்ன லட்சியம் இருக்கும்? நல்ல வேலை கிடைத்ததும் இஎம்ஐயில் அபார்ட்மெண்ட் புக் பண்ணிய கையோடு, ஏரியா அசரும் அட்டகாச அழகியை மேரேஜ் செய்து மொய்ப்பணம் பிளஸ் டௌரியில் ஸ்போர்ட்ஸ் காரை சல்லீசு ரேட்டில் புக் செய்வதுதானே! ஆனால் முனாஃப் கபாடியா, தன் லேட்டரங் திங்கிங்கில் ஹோட்டல் தொடங்கி லட்சாதிபதியாகியிருக்கிறார்.


மும்பையின் நர்சிமோன்ஞ்சி யுனிவர்சிட்டியில் எம்பிஏ படித்த, முனாஃப் கபாடியா, கூகுளில் வேலை பார்த்தவர்தான். சமையலில் கலக்கும் தன் அம்மா, ரிமோட்டை கூட தராமல் டிவி பார்ப்பதைத் தடுத்து அவரை பிஸியாக்க நினைத்து தொடங்கியதுதான் போரி கிச்சன். வீட்டிலேயே தொடங்கியுள்ள வீக் எண்ட்டான சனி, ஞாயிறு மட்டும் இயங்கும் இந்த ரெஸ்டாரெண்ட்தான் இன்று மும்பையின் செம ஹாட் ஸ்பாட். ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் 30 வயதுக்குட்பட்ட சாதனையாளர்கள் லிஸ்டில் துண்டுபோட்டு இடம் ரிசர்வ் செய்த முனாஃப், தன் மட்டன் சமோசாவை விற்று சம்பாதித்தது எவ்வளவு தெரியுமா? ஜஸ்ட் 50 லட்சம் ரூபாய்கள்.   

வேட்டிக்கு அவமரியாதை!

வேட்டி திருமண முகூர்த்தத்தின்போது, அணியும் ஆடையாக சுருங்கிப்போய்விட்ட காலமிது. டிவி சேனல்களில் வேட்டியை சேல்ஸ் செய்ய ராஜகம்பீரம் என புகழ்ந்தாலும் பிராக்டிகலாக பல இடங்களில் வேட்டிக்கு தடா உள்ளது. கொல்கத்தாவில் வணிகமாலிலேயே ஒருவரை தடுத்து நிறுத்தியிருக்கின்றனர் எதற்காக? இடுப்பில் அவர் கட்டியிருந்தது வேட்டி என்ற ஒரே காரணத்திற்காகத்தான்.

கொல்கத்தாவின் க்வெஸ்ட் மாலில்தான் இந்திய உடைக்கு நடந்தது இந்த அவமானம். குர்தா, வேட்டி அணிந்து மாலுக்குள் நுழைய முயன்ற டெப்லீனா சென் என்பவரின் நண்பரை மாலின் செக்யூரிட்டிகள் தடுத்து நிறுத்தியிருக்கின்றனர். காரணம் கேட்டபோது, லுங்கி, வேட்டிக்கு அனுமதியில்லை என கறார் காட்டியவர்கள், பின் நண்பர், கௌதம் படவில்லன்கள் போல இங்கிலீசில் தன் உரிமையைப் பேச, உடனே அனுமதி கிராண்டட் என க்ரீன் சிக்னல் காட்டியிருக்கின்றனர் செக்யூரிட்டிகள். புதிய இந்தியா!   

ஆக்ஸ்ஃபோர்டு மாணவனை தாக்கிய இந்தியர்கள்!

உயர்கல்வியில் ஐஐடியில் சேர உதவும் IIT-JEE தேர்வுக்கு இன்று 10 ஆம் வகுப்பிலிருந்தே ட்யூஷன் போவது இன்றைய வழக்கம். ஏன்? கொஸ்டின் பேப்பர் அவ்வளவு ரஃப் அண்ட் டஃப். அதை டேக் இட் ஈஸியாக எழுதிய மாணவனுக்கு கிடைத்த பரிசு என்ன தெரியுமா?

ஆக்ஸ்‌ஃபோர்டு யுனிவர்சிட்டியில் மூன்றாமாண்டு இயற்பியல் படிக்கும் ஜேக் ஃப்ரேஸர் குவாரா தளத்தில் ஏதேச்சையாக ஐஐடி கொஸ்டீன் பேப்பரை பார்த்தார். நம்மூர் குறுக்கெழுத்து போட்டிபோல பரபரவென விடை எழுதியபின் பார்த்தால், எக்சாம் டைமின் கால்வாசி நேரத்திலேயே  பரீட்சையை எழுதியிருந்தார்இந்த தேர்வுக்காகவே தன் ஆயுளை அர்ப்பணிக்கும் மகாதீரர்களான இந்தியர்களில் சிலருக்கு இது பீதியைக் கிளப்பியது. பொறாமை பிளஸ் எரிச்சலோடு ஃப்ரேஸரின் குடும்பத்தினரின் ஃபேஸ்புக், ட்விட்டர் கணக்குகளை ஃபாலோ செய்து சீண்டல் கமெண்டுகளையும் ஆபாச போட்டோக்களையும் பதிவிட நேரத்தை வீண் செய்யவேண்டாம் ப்ரெண்ட்ஸ்! என்பதுதான் விரக்திக்குள்ளான ஃப்ரேஸரின் ஒரே பதில்! அமெரிக்கன் எம்பசி க்யூவுக்கு காரணம் இதுதானோ?

செல்ஃபீயால் நாசமான கண்காட்சி

கல்யாணம் டூ சாவு வரை அங்குள்ள ஆட்கள் தெரிந்தவர்களோ இல்லையோ உள்ளே புகுந்து மூச்சு முட்ட செல்ஃபீ எடுப்பதுதான் யங் ஜெனரேஷன் கெத்து. அமெரிக்காவில் நடந்த  ஒரு எக்சிபிஷனே செல்ஃபீயால் என்ன கதிக்கு ஆளாச்சு தெரியுமா?

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த ஓவியக்கண்காட்சி குதூகலமாக தொடங்கி நடந்தது. பெயிண்டிங்கை அர்த்தம் அறிவதை விட,  பெயிண்டிங்குடன் நான், சிற்பங்களுக்கான நான் என செல்ஃபீ பெண் ஒருவர் மும்முரமாக வளைத்து கிளிக்கிய செல்ஃபீ சரியாக செட் ஆகவில்லை. கலைதாகம் லிட்டர் கணக்கில் பெருக, முட்டிங்கால் போட்டு சிற்பம் அருகில் எடுத்த செல்ஃபீயில் அம்மணிக்கு லைட்டாக கால் பேலன்ஸ் தவற, தன் மலர்மேனியை மெதுவாகத்தான் பின்னால் சாய்த்தார். என்ன செய்வது? அந்த இடத்தில் சிற்பம் இருந்து தொலைத்தது. ஒன்றின் மீது ஒன்று என அத்தனை ஓவியங்கள், சிற்பங்களும் ஒன்றுடன் ஒன்று மிங்கிளாகி டோமினோ எஃபக்டாய் சரிந்து விழுந்து உடைந்ததில் கண்காட்சி நடத்தியவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் துல்லியமாக 2 லட்சம் டாலர்கள். செல்ஃபீ புள்ள எங்கே?  


ரிசர்வேஷன் விவசாயி!

இந்தியாவில் தலித், பழங்குடியினருக்கு மேல்நிலைக்கல்வியில் நுழைய ஒரே வாயில், ரிசர்வேஷன்தான். கேரளாவைச் சேர்ந்த இளைஞர் 'ரிசர்வேஷன் என் வாழ்க்கையை, கனவை அழித்துவிட்டது' என குமுறல் பதிவை ஃபேஸ்புக்கில் பதிந்திருக்கிறார். என்னாச்சு?

கேரளாவைச் சேர்ந்த லிஜோ ஜாய் என்ற இளைஞர் பிளஸ்டூவில் 79.9% மார்க் எடுத்து கவுன்சிலிங்கில்  கலந்துகொண்டாலும் எந்த கல்லூரியிலும் இடம் கிடைக்கவில்லை. "கல்லூரியில் இடம் கிடைக்க ரிசர்வேஷன் அல்லது பணம் தேவை. ஆனால் இரண்டுமே என்னிடம் இல்லை என்பதால் வேறுவழியின்றி விவசாயம் செய்து வருகிறேன். 50% மார்க் வாங்கிய என் நண்பர்களுக்கு ரிசர்வேஷனில் இடம் கிடைத்திருக்கிறது. ஆனால் நான் நன்றாக படித்து மார்க் வாங்கியும் பிரயோஜனமில்லை" என கண்கலங்கி லிஜோ ஜாய் போட்ட பதிவுகளோடு, நிலத்தில் வேலை செய்யும் அவரது புகைப்படங்கள் செம எமோஷனல். இப்பதிவுகள், ரிசர்வேஷன் இனியும் வேண்டுமா என்பது குறித்த கடும் விவாதத்தை சமூக வலைதளங்களில் ஏற்படுத்தியதோடு ஹாட் வைரலாகியுள்ளது.

நன்றி: குங்குமம் வார இதழ்