ஓப்பன் மைண்ட்ஸ் 2023



விக்ரமாதித்ய மோட்வானே

46

இந்தி சினிமா இயக்குநர்

அனுராக் காஷ்யப்பின் உதவி இயக்குநர். 2010ஆம் ஆண்டு உடான், 2013ஆம் ஆண்டு லூட்டெரா ஆகிய மறக்க முடியாத திரைப்படங்களை உருவாக்கியவர். தனது சினிமா பயணத்தில் தொடக்க கால சினிமா செட்டில், மிக இளம் வயது கொண்ட நபராக இருந்து தற்போது செட்டில் அதிக வயதான நபராக மாறியிருக்கிறார். அப்போதும் இப்போதும் மாறாத காதலுடன் திரைப்படங்களை உருவாக்கி வருகிறார். 1940ஆம் ஆண்டில் இந்தி சினிமா உருவாக்கப்பட்டதை ஜூப்ளி என்ற வெப் சீரியசாக எடுத்து வருகிறார்.

‘’கதை சொல்லும் முறை, பாத்திரங்கள் என அனைத்துமே வேறுபட்டவை’’ என ஜூப்ளி வெப் சீரிஸ் பற்றி கூறுகிறார். இந்தி சினிமாவின் வெளியை மேலும் மேலும் விரிவுபடுத்திக் கொண்டு செல்லும் நவீன இயக்குநர்களில் மோட்வானே முக்கியமானவர்.


ஆபிரஹாம் வர்கீஸ்

68

மருத்துவர், எழுத்தாளர்

ஒரு மருத்துவர் நூல் எழுதுவதாக இருந்தால் என்ன எழுதுவார்? அவரது அறுவை சிகிச்சைகள், திறன் வாய்ந்த நுட்பங்கள், காப்பாற்றிய மனிதர்கள் இப்படித்தானே? ஆனால் ஆபிரஹாம் எழுதிய நாவலான தி காவ்னன்ட் ஆஃப் வாட்டர், அதன் கதை அளவில் புகழ்பெற்று பலரையும் வாசகர்களாக்கியுள்ளது. கேரளத்தை மையமாக கொண்டு நடைபெறும் கதை, நூறாண்டு காலத்தை தன்னுள் கொண்டுள்ளது.’’ மூன்று வயதிலிருந்து வாசித்து வருகிறேன். நான் எனது வாழ்நாள் முழுக்க படிக்கும் ஐந்து நூல்களில் ஒன்று என ஆபிரஹாமின் நாவலைக் கூறுவேன்’’ என அமெரிக்காவின் தொலைக்காட்சி பிரபலமான ஓப்ரா வின்ஃப்ரே கூறியது நாவலின் தரத்திற்கான சான்று.


எஸ்எஸ் ராஜமௌலி

49

தெலுங்கு திரைப்பட இயக்குநர்

 

வலதுசாரி கருத்தியலை அடிப்படையாக கொண்டு திரைமொழியை அழுத்தமாக பார்வையாளர்கள் மனதில் பதிய வைப்பவர். பார்வையாளர்களுக்கு உணர்ச்சியையும், அதேசமயம் தொழில்நுட்ப ரீதியாக மிரட்டலான காட்சியமைப்பையும் கொண்டு சேர்ப்பதில் ராஜமௌலிக்கு நிகர் யாருமில்லை. நவீன காலத்தில் தான் நம்பும் கருத்தை வலிமையாக பார்வையாளர்களுக்கு கடத்தும் திறன் கொண்ட இயக்குநர் இவரே. தெலுங்கு மொழியில் திரைப்படத்தை எடுத்தாலும் அதை இந்திய மொழிகளுக்கு மாற்றினாலும் தாக்கம் குறையாமல் இருப்பது ராஜமௌலியின் திறனுக்குசான்று.

தந்தை வி விஜயேந்திர பிரசாத்தின் கதைக்கு ராஜமௌலி அமைக்கும் திரைக்கதை பனிரெண்டு படங்களை மகத்தான வெற்றிப்படங்களாக மாற்றியிருக்கிறது. ஒவ்வொரு படத்திலும் தான் கனவுகண்ட தொழில்நுட்பம் நோக்கிய ஓரடியை கவனமாக எடுத்து வைத்து நினைத்ததை பாகுபலி, டிரிபிள் ஆர படங்களில் சாதித்திருக்கிறார்.

டிரிபிள் ஆர் படத்தின் பாடலுக்கு ஆஸ்கர் பெற்றுத்தந்த இயக்குநர், தெலுங்கு சினிமாவை கவனிக்கும்படி மாற்றியிருக்கிறார். ஆஸ்கர் விழாவில் ஜேம்ஸ் கேமரூன், ஸ்டீபன் ஸ்பீல்பர்க் ஆகிய ஆளுமைகளை சந்தித்து பேசிவிட்டு திரும்பியிருக்கிறார். பொழுதுபோக்கு சினிமாவை ரசிக்கும் விதமாக மாற்றிய நம்பிக்கை தரும் இயக்குநர்.

 

 

  

தீபிகா படுகோன்

37

இந்தி சினிமா நடிகை

(உலகப் பிரபலம்)

 

மொத்தம் 30 படங்கள் நடித்திருக்கிறார. படங்களின் வருமானம் 28 பில்லியன் டாலர்கள். பல லட்சம் ரசிகர்களோடு இன்ஸ்டாகிராமில் ஊக்கமுடன் உரையாடி செயல்படுகிறார். அதன் வழியாக தனது சொந்த பிராண்டுகளையும் கார்டியர், எல்விஎம்ஹெச் ஆகிய பிராண்டுகளையும் விளம்பரம் செய்கிறார். இதெல்லாம் தாண்டி லைவ் லவ் லாஃப் ஃபவுண்டேஷன் மூலம் கர்நாடகா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மன அழுத்தம் சார்ந்த  தீர்வுகளை வழங்கி வருகிறார். ஆஸ்கர் விழா மேடை, ஃபிபா உலக கோப்பை என பங்கேற்கும் அனைத்து மேடைகளிலும் வசீகரமான உடை, முகமெல்லாம் நிறைந்த புன்னகை என வலம்வந்து நாளிதழ்களின் தலைப்புச்செய்தி ஆகும் நடிகை. இவரோடு சேர்ந்து இந்திய சினிமாவும் பிரபலமடைந்து வருகிறது.


குனீத் மோங்கா

39

சினிமா தயாரிப்பாளர்

சிக்யா என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனத்தை பலரும் கேள்விப்பட்டிருக்கக்கூட மாட்டார்கள். ஆனால் இன்று குனித் மோங்காவின் நிறுவனம் என்பதால் அதைபற்றிய செய்திகளை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

விரும்பிய சினிமாவை தயாரித்து அதை விற்க பைக்கில் தியேட்டர் தியேட்டராக அலைந்து மார்க்கெட்டிங் செய்தவர், தனது ‘எலிபெண்ட் விஸ்பர்ஸ்’ என்ற ஆவணப்படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்றிருக்கிறார். தனக்கு பிடித்த கதையை சினிமாவாக எடுக்க வீட்டைக் கூட விற்க தயங்காத தயாரிப்பாளர்.

இவர் பிறரின் கதை மீது கொள்ளும் நம்பிக்கை ஆழமானது. அதனால்தான் ‘லன்ச் பாக்ஸ்’ என்ற இந்திப் படத்தை 2015ஆம் ஆண்டு பாஃப்டா விருதுக்கு அனுப்ப முடிந்தது. 2019ஆம் ஆண்டு’ பீரியட் எண்ட் ஆஃப் சென்டன்ஸ்’ என்ற ஆவணப்படத்திற்கு ஆஸ்கர் பெற முடிந்தது. கரண் ஜோகர், குனீத் மோங்காவின் நிறுவனத்துடன் இணைந்து செயல்படவிருக்கிறார். இந்திய அரசு இவரை தான் நடத்தும் கான்ஸ் விழா நடுவராக தேர்ந்தெடுத்திருக்கிறது. 

 

 

 

 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்