ஓப்பன் மைண்ட்ஸ் 2023 - ராஜ் ஷெட்டி, மாதாபி, ரோகினி பாண்டே, மஞ்சுள் பார்க்கவா

 








மாதாபி, தலைவர், செபி

ராகுல் பாட்டியா, இண்டிகோ

என் சந்திரசேகரன், டாடா குழுமம்

ரோகினி பாண்டே, பொருளாதார வல்லுநர்

ராஜ் ஷெட்டி, பொருளாதார வல்லுநர்




ராஜ் செட்டி

43

பொருளாதா வல்லுநர்

டெல்லியை பூர்விகமாக கொண்ட பொருளாதார வல்லுநர். அரசின் கொள்கைகளை பொருளாதார தகவல்கள் அடிப்படையில் உருவாக்கவேண்டும் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். தனது 29 வயதில் பெருமை மிக்க ஜான் பேட்ஸ் கிளார்க் விருதை வென்றவர். இந்த விருது, பேபி நோபல் பரிசு என மரியாதையாக குறிப்பிடப்படுகிறது.

பொருளாதார  பாகுபாடுகள் பற்றிய ஆய்வுகளை அர்ப்பணிப்புடன் செய்தவர், ஏழை மக்களில் 30 சதவீதம்பேர்தான் உயர்கல்விக்கு செல்கிறார்கள் என்ற உண்மையைக் கூறியிருக்கிறார். தற்போது ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொது பொருளாதாரப் பிரிவில் பேராசிரியராக உள்ளார்.

 

மாதாபி பூரி புச்

தலைவர்,செபி

நிதி சந்தையைக் கட்டுபடுத்தும் ஒழுங்குமுறை அமைப்பின் முதல் பெண் தலைவர்.

ஐஐஎம் அகமதாபாத்தில் எம்பிஏ பட்டதாரி. கடந்த ஆண்டு செபியில் தலைவராக பதவியேற்றவர், அதன் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை உருவாக்க முனைந்து வருகிறார். பொதுவாக அரசியல்வாதிகளுக்கும், அரசுக்கும் ஏற்றபடி தலைவணங்கி செயல்படும் செபி, மாதாபியின் தலைமையில் என்ன மாதிரியான முடிவுகளை எடுத்து பயனாளர்களைக் காக்கிறது என எதிர்காலத்தில்தான் தெரிய வரும்.

 

ரோகினி பாண்டே

51

பொருளாதார வல்லுநர்

வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதார பிரச்னைகளுக்கு தீர்வுகளைக் கூறுபவர், 2022ஆம் ஆண்டு இன்ஃபோசிஸ் சயின்ஸ் விருதைப் பெற்றார். யேல் பல்கலைக்கழத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறார். அங்கு, நாட்டில் அணைகளை கட்டுவதன் சாதக, பாதகங்கள், கிராமங்களில் வங்கி விரிவாக்கம் செய்யப்படுவதில் உள்ள தாக்கம், அரசு நிர்வாகத்தில் பெண்கள் பங்கேற்பு அரசியல் பொருளாதாரத்தில் உள்ள அம்சங்கள் பற்றி ஆய்வுகளைச் செய்துள்ளார்.

 

மஞ்சுள் பார்க்கவா

48

கணித வல்லுநர்

2014ஆம் ஆண்டு தனது எண்கள் கோட்பாட்டிற்கு ஃபீல்ட் பதக்கம் வென்றவர் மஞ்சுள் பார்க்கவா. இந்த துறையில் இவரை ஒரு பிரபலம் என கூறலாம். 2033ஆம் ஆண்டுக்குள் குழந்தைகள் அடிப்படையான கணிதத்தைக் கற்க உதவும் பணியை, அரசுடன் இணைந்து செய்துவருகிறார். கனடாவில் பிறந்தவர், அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறார். சமஸ்கிருத மொழியைக் கற்பது, தபலா வாசிப்பது என தனக்கான ஆர்வங்களோடு கணிதத்தை மேம்படுத்த உழைத்து வருகிறார்.

 

 

என் சந்திரசேகரன்

60

தலைவர், டாடா குழுமம்

தலைவராக பதவியேற்று ஆறு ஆண்டுகள் ஆகின்றன. டாடா மோட்டார்ஸ் துறையில் இருக்கிறதா இல்லையா என பலரும் நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் பல்வேறு மாடல்களை வெளியிட்டு அதை சந்தையில் முக்கியமான நிறுவனமாக மாற்றினார்.

ஏர் இந்தியாவை அரசிடமிருந்து திரும்ப வாங்கி, விஸ்தாராவுடன் இணைத்தார். இப்போஉ, ஏர் இந்தியா நிறுவனம்,  470 விமானங்களை வாங்குவதற்கான முயற்சியில் உள்ளது.

சந்திரசேகரன், டாடா குழுமத் தலைவர் பதவிக்கு முன்னர் டிசிஎஸ்சில் இயக்குநராக இருந்தார். தனது திறமையால் டிசிஎஸ்சின் வருமானத்தை அதிகரித்தார். தற்போது தனது தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி ‘டாடா நியூ’ என்ற சூப்பர் ஆப்பை உருவாக்கி வெளியிட்டிருக்கிறார். இந்த ஆப் மூலம் டாடாவின் அத்தனை பிராண்டுகளையும், சேவைகளையும் இருந்த இடத்திலேயே பெற முடியும்.

 

ராகுல் பாட்டியா

67

நிர்வாக தலைவர்,இண்டிகோ

 

இண்டிகோ நிறுவனம், விமானசேவை துறையில் பல்வேறு நிறுவனங்களும் திவாலாகிக் கொண்டிருந்த நிலையிலும் சிறப்பாக இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தின் விமானங்கள் சொன்ன நேரத்திற்கு சரியாக வந்து சேரும் ஒழுக்கத்தைக் கடைபிடிக்கின்றன. உலகளவில் 27 முக்கியமான நகரங்களுக்கு இண்டிகோ விமானங்கள் சென்று வருகின்றன. எதிர்காலத்தில் இன்னும் அதிகமாக இடங்களுக்கு செல்லும் வகையில் 500 ஏ320 வகை விமானங்களை வாங்க முன்பதிவு செய்திருக்கிறது. நிர்வாகம் செயல்பாடு என்ற வகையில் விமானசேவை துறையில் முக்கியமான நிறுவனமாக வளர்ந்து வருகிறது.


ஓப்பன் வார இதழ்



கருத்துகள்