தானியங்கி முறையில் இயங்கும் கார்கள், அவை பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள்!

 










என்ஓஏ, என்ஏடி, என்சிஏ, ஏசிடிஎம் என்ற சொற்களை கேட்டால் உங்களுக்கு குழப்பமாக இருக்கிறதா? இதெல்லாம் கார் தயாரிப்புத் துறையில் பயன்படுகிற சொற்கள். இப்போது டிரெண்டிங்கில் இருப்பது தானியங்கியாக இயங்கும் கார்கள்தான். அப்படி இயங்குகிற கார் தயாரிப்பு நிறுவனங்கள், இப்படி சொற்களை கண்டுபிடித்து வைத்து குழப்புகின்றன. உண்மையில் கார்களின் தானியங்கி இயக்க முறை என்பது ஒரே முறைதான். ஆனால் வெவ்வேறு பெயர்களில் தொழில்நுட்பத்தை பயனர்களுக்கு காட்டி மயக்க முயல்கின்றன. 


லீ ஆட்டோவின் தொழில்நுட்பம் என்ஓஏ எனவும், ஹூவாய் என்சிஏ - நேவிகேஷன் க்ரூஸ் அசிஸ்ட் எனவும், டெஸ்லா - எஃப்எஸ்டி, எக்ஸ்பெங் நிறுவனம், எக்என்ஜிபி எனவும் பல்வேறு எழுத்துகளை இணைத்து புதுமையான பெயர்களை வைத்து வருகின்றன. இந்த கார் நிறுவனங்கள் லேசர், கேமரா ஆகியவற்றை பயன்படுத்தி தானியங்கி கார் சோதனைகளை செய்து வருகின்றன. பெரும்பாலான நிறுவனங்கள் பயன்படுத்துவது ஒரே தொழில்நுட்ப கருவிகள்தான். ஆனால் பெயர்களை மாற்றி வைத்து மக்களை ஏமாற்றி குழப்புகின்றன. இப்படி பயன்படுத்தும் கருவிகளுக்கு குறிப்பிட்ட தரம் இருக்கிறதா என்பதே கேள்விதான். 


பெரும்பாலான இதுபோன்ற சொல் விளையாட்டுகளை சீன நிறுவனங்கள் சந்தையில் உருவாக்கி வருகின்றன. பெரும்பாலான தானியங்கி கார்களை, ஓட்டுபவர் அவர் தனது கண்காணிப்பில்தான் செயல்படுத்தி வருகிறார். அப்படி இல்லாதபோது கார் விபத்தில் சிக்குகிற ஆபத்தும் உண்டு. இதைத்தான் நிறுவனங்கள் குழப்பான சொற்கள் வழியா கூற வருகின்றன. தானியங்கி கார்களில் உள்ள பிரச்னை என்னவென்றால், அதன் மென்பொருட்களை குறிப்பிட்ட காலத்திற்கு மாற்றவேண்டும் என்பதுதான். இந்த தொழிலில் ஹூவாய், லீ ஆட்டோ, எக்ஸ்பெங்க் ஆகிய நிறுவனங்கள் பல்வேறு கட்ட திட்டங்களோடு முன்னே நகர்ந்து வருகின்றன. 


நேவிகேட் ஆன் ஆட்டோபைலட் என்பதை என்ஓஏ என்றும், ஃபுல் செல்ஃப் டிரைவிங் என்பதை எஃப்எஸ்டி என்றும் அழைக்கிறார்கள். இந்த வார்த்தைகள் சற்று அர்த்தம் கொண்டவை. அதாவது மேலே சொன்ன பிற வார்த்தைகளோடு ஒப்பிடுகையில்.... முழுமையான தானியங்கி இயக்க முறையில் பயனர் ஸ்டீரியரிங் வீலை கூட தொட வேண்டியதில்லை. இதற்கான சோதனையை டெஸ்லா வட அமெரிக்காவில் செய்து வருகிறது. அதுவே சாலை போக்குவரத்து விளக்குகளை பார்த்து, நடைபாதையைக் கவனித்து காரை இயக்கும். என்ஓஏ கார்களில் பயனர், தொழில்நுட்பத்தை கண்காணித்து காரை இயக்கவேண்டும். சீனாவில் தானியங்கி கார்களுக்கான சோதனை பரபரப்பான சாலைகளில் கூட தொடங்கியுள்ளது. இதை பார்க்கும்போது தொழில்நுட்பத்தில் சீன கார் தயாரிப்பு நிறுவனங்கள் வேகமாக முன்னேறி வருவது தெரிகிறது.


ஸெயி யாங்

எம்ஐடி டெக்னாலஜி ரிவியூ


கருத்துகள்