சிக்மண்ட் ஃப்ராய்டின் மனப்பகுப்பாய்வு கொள்கைகள் மங்கத்தொடங்கிய காலகட்டம்!

 










காலக்கோடு

1895

சிக்மண்ட் ஃபிராய்ட், ஜோசப் ப்ரூயர் ஆகியோர் இணைந்து ஸ்டடிஸ் ஆன் ஹிஸ்டீரியா என ஆய்வறிக்கையை வெளியிட்டனர். 


1900


சிக்மண்ட, இன்டர்பிரிடேஷன் ஆஃப் ட்ரீம்ஸ் என்ற நூலில் சைக்கோ அனாலிசிஸ் என்ற கருத்தை அறிமுகப்படுத்தினார். 


1921


கார்ல் ஜங்க், தனது சைக்காலஜிகல் டைப்ஸ் என்ற நூலில் இன்ட்ரோவர்ட் எக்ஸ்ட்ரோவர்ட் என்ற கருத்துகளை வெளியிட்டார். 


1927


ஆல்ஃபிரட் அட்லர் என்பவரே தனிநபர் உளவியலுக்கான அடித்தளமிட்டவர். இவர் தி பிராக்டிஸ் அண்ட் தியரி ஆஃப் இண்டிவிஜூவல் சைக்காலஜி என்ற நூலை எழுதினார். 


1936


தி ஈகோ அண்ட் தி மெக்கானிச் ஆஃப் டிபென்ஸ் என்ற நூலை அன்னா ஃபிராய்ட் எழுதினார்.


1937


பதினான்காவது சைக்கோ அனாலடிகல் மாநாட்டில் ஜாக்குயிஸ் லாகன், தி மிரர் ஸ்டேஜ் என்ற அறிக்கையை வெளியிட்டார். 


1941


சிக்மண்டின் கருத்துகளில் கரன் கார்னி வேறுபாடு கொண்டு அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஃபார் சைக்கோஅனாலிசிஸ்  என்ற அமைப்பைத் தொடங்கினார். 


1941


எரிக் ஃப்ரோம், தி ஃபியர் ஆஃப் ஃப்ரீடம் என்ற சமூக அரசியல் உளவியல் நூலை எழுதினார். 


இருபதாம் நூற்றாண்டில் குணநலன் சார்ந்த ஆராய்ச்சிகளை அமெரிக்க உளவியலாளர்கள் தீவிரமாக செய்யத் தொடங்கினர். ஆனால் இதில் சிக்மண்ட் ஃபிராய்ட் ஒரு தடையாக மாறினார். அவர் மனப்பகுப்பாய்வு, நோயாளிகளை கவனித்து நோய் பற்றி குறிப்புகளை வைத்திருந்தார். அதை வைத்து சிகிச்சை செய்தார். மேற்படி கொள்கை, கோட்பாடுகளை ஆய்வுசெய்யவில்லை. இதனால் குறிப்பிட்ட கொள்கை பற்றிய உறுதியான ஆதாரங்கள் ஏதுமில்லை. மனதின் பல்வேறு நிலைகள், குணநலன் சார்ந்த ஆய்வுகளே பெரியளவு நடைபெறவில்லை. 


பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த நரம்பியலாளர் ஜீன் மார்ட்டின் சார்கட்டுடன் சிக்மண்ட் இணைந்து ஆய்வுகளை செய்து வந்தார். சார்க்கட்டின் ஹிப்னாசிஸ் சிகிச்சை அவரை கவர்ந்தது. ஹிஸ்டீரியா நோயாளிகளுக்கு அச்சிகிச்சை பயனும் கொடுத்தது. ஒருவரின் தன்னுணர்வற்ற நிலையில் அவரின் கடந்தகால சோகமாக வலி, வேதனைகளை மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்து அவரின் மனநல குறைபாட்டு அறிகுறிகளை தீர்க்கலாம் என சிக்மண்ட் முடிவுக்கு வந்தார். 



சிக்மண்டின் சிகிச்சை முறை ஐரோப்பிய நாடுகளுக்கு பரவியது. இதனால் ஈர்க்கப்பட்டவர்களாக கார்ல் ஜங், ஆல்ஃபிரட் அட்லர் ஆகிய உளவியலாளர்கள் இருந்தனர். பின்னாளில் இவர்கள் சிக்மண்டின் கொள்கைகளை அடிப்படையாக கொண்டு பிற விஷயங்களை மாற்றி தங்களுக்கென தனி சிகிச்சை முறைகளை உருவாக்கிக் கொண்டனர். இதை சரி அல்லது தவறு என்று கூட முழுக்க கூறிவிட முடியாது. சிக்மண்டின் மகள் அன்னா, மருத்துவர் மெலனி கிளெய்ன், கரன் ஹார்னி ஆகியோரும் கூட மெல்ல விலகிக்கொண்டனர். கூட்டான தன்னுணர்வற்ற நிலை என கார்ல் ஜங் தனது கொள்கையை உருவாக்கினார். எரிக் எரிக்சன், சமூக பழக்க வழக்கங்களை அடிப்படையாக கொண்டு கொள்கைகளை உருவாக்கிக் கொண்டார். 

இப்படி மாறுதல்களை சந்தித்தாலும் கூட இரண்டாம் உலகப்போர் முடியும்வரை கொள்கை பெரியதாக எதிரிகளை, மறுப்பை சந்திக்கவில்லை. பிறகுதான் மாற்றங்கள் நடைபெறத் தொடங்கின. ஜெர்மனியில் கெஸ்சால்ட் சிகிச்சையை ஃபிரிட்ஸ், லாரா பியர்ல்ஸ், பால் குட்மேன் ஆகியோர் உருவாக்கினர். 


இருத்தலியல் கொள்கையில் ஆர்வம் கொண்ட உளவியலாளர்களான விக்டர் பிராங்குல், எரிச் ப்ரோம் ஆகியோர் சிகிச்சை சமூக அரசியல் திட்டம் கொண்டதாக பார்த்தனர். 1950ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள உளவியலாளர்கள் சிலர் அடிக்கடி ஒன்றாக சந்தித்தனர். மூன்றாவது சக்தி என்று கூறிக்கொண்டவர்கள் உளவியலில் சுதந்திரம், சுய புரிதல், புதுமைத்திறன் ஆகியவற்றை விரும்பினர். இதை உருவாக்கியவர்களான ஆப்ரஹாம் மஸ்லோ, ரோலோ மே, கார்ல் ரோஜர்ஸ் ஆகியோர், மனநல குறைபாட்டிற்கு சிகிச்சை அளிப்பதைப்போலவே மனநலனை பாதிக்கப்படாமல் காப்பாற்றுவதும் முக்கியம் என நம்பினர். சிக்மண்டின் மனப்பகுப்பாய்வு கொள்கை, சிகிச்சை என இரண்டுக்குமே ஆதாரப்பூர்வ ஆதாரங்கள் கிடையாது என அறிவுப்பூர்வ உளவியல் சார்ந்த உளவியலாளர்கள் வாதிட்டனர். ஏனெனில் அவர்களின் கருத்துக்கு அறிவியல் முறைகளில் கண்டறிந்த ஆதாரங்கள் கையில் இருந்தன. 


ஆல்பெர்ட் எல்லிஸின் ரேஷனல் எமோஷனல் பிஹேவியர் தெரபி, ஆரோன் பெக்னின் அறிவாற்றல் சிகிச்சை தொடர்பான கொள்கை, கோட்பாடு ஆதாரங்கள் கண்டறிப்பட்ட காலம் அது. இருபதாம் நூற்றாண்டு உளவியலாளர்கள் சிக்மண்ட் கூறிய ஒருவரின் பால்ய காலத்தைக் கடந்து குடும்ப சூழலையும் கவனிக்கத் தொடங்கினர். இதற்கு கை கார்னியு, வர்ஜினியா சடிர் ஆகியோரை எடுத்துக்காட்டாக கூறலாம். பிறர் சமூகம் சார்ந்த காரணிகளையும் ஆய்வு செய்யத் தொடங்கினர். 

adobe.com

pixabay.com






















 


கருத்துகள்