ஏஐ தொகுப்பாளர்! - சீனா அதிரடி
ஏஐ தொகுப்பாளர்!
சீனாவின் அரசு டிவியான ஷின்ஹுவா,
செயற்கை நுண்ணறிவு தொகுப்பாளரை சீனமொழி மற்றும் ஆங்கில செய்திக்கென அறிமுகம் செய்து
அசத்தியுள்ளது.
சீன தொகுப்பாளரான ஸாங் ஸாவோ என்பவரின்
உருவத்தையும் குரலையும் பிரதியெடுத்தாற்போல உருவாகியுள்ள புதிய ஏஐ தொகுப்பாளர், செய்தி
தயாரிப்பிற்கான செலவை குறைக்கவும் நேர்த்தியை அதிகரிக்கவும் உதவுவார் என்கிறது டிவி
சேனல் தரப்பு. நாட்டின் இணையம் மற்றும் ஸ்மார்ட்போன்களிலும் ஏஐ தொகுப்பாளர் தோன்றத்தொடங்கியுள்ளதை
மக்கள் ஆர்வமுடன் பார்க்கத் தொடங்கியுள்ளனர்.
செயற்கை நுண்ணறிவுடன் தொகுப்பாளர்
என்பது ஈர்த்தாலும் உதட்டு அசைவுகளும், குரலும் அவ்வளவு பொருத்தமாக அமையவில்லை என்பது
உண்மை. அரசின் எண்ணத்திற்கேற்ப செய்தியை வளைத்து தணிக்கை செய்து வெளியிடுவது சீனாவுக்கு
புதியதல்ல. சீனா, ஊடகங்களில் கூட மனிதர்கள் அவசியமில்லை என முடிவெடுத்துவிட்டது என
ஊடகவியலாளர்கள் விமர்சித்துள்ளனர். பிரபலங்களை டிஜிட்டல் வடிவில் உயிர்பித்து கொண்டுவருவதை
இனி செய்திகளிலும் மக்கள் பார்க்கலாம்.
செய்தியை கூறுபவரின் உச்சரிப்பு,
முகத்தோற்றம் ஆகியவற்றுக்காக பார்ப்பது போய் ஒரேமாதிரியான குரல், உச்சரிப்பு என இருப்பதை
இனி உலக மக்கள் பார்க்கப்போகிறார்கள்.