அணுஆயுத ஒப்பந்தம் காலாவதியாகிறதா?





Image result for inf treaty




ஒப்பந்தத்தை மீறியது யார்?

ரஷ்யா அணு ஆயுத தடை ஒப்பந்தத்தை மீறியதாக அதிபர் ட்ரம்ப் ஏகத்துக்கும் அடம்பிடித்து எகிற, ரஷ்யா அமெரிக்க பிரதிநிதியான ஜான் போல்டனிடம் இதற்கான விளக்கமளித்து எப்போதும்போல அமெரிக்காவின் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

அணுஆயுத தடை(INF) ஒப்பந்தம் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன், சோவியம் யூனியன் அதிபர் மிகைல் கோர்ப்பசெவ் ஆகிய தலைவர்கள் கையெழுத்திட 1987 ஆம் ஆண்டு அமுலுக்கு வந்தது. இந்த ஒப்பந்தம் மூலம் 2 ஆயிரத்து 600 ஏவுகணைகள்(5,504 கி.மீ)செல்லும் அழிக்கப்பட்டன. ஜான்போல்டன் இந்த ஒப்பந்தத்தை அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கிடையே உருவாக்கும் ஆலோசனையையும் கையில் வைத்துள்ளார். “உங்கள்”கழுகு அனைத்து ஆலிவ் இலைகளையும் சாப்பிட்டுவிட்டது. இனி மிச்சம் அம்புகள்தானே இருக்கின்றன?” என புதின் கிண்டலாக கேட்க, ஜான் போல்டன் எதுவும் சொல்லாமல் புன்னகைத்தார்.

அமெரிக்கா ஒப்பந்தத்தை வாபஸ் வாங்கிக்கொள்வதாக கூறினாலும் அதற்கு 6 மாதங்களை அவகாசமாக ரஷ்யாவுக்கு தரவேண்டிய நிர்பந்தம் உள்ளது. முதல் உலகப்போரின் நூறாவது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு ரஷ்ய அதிபர் புதின், அமெரிக்க அதிபர் சந்திக்கும் சந்திப்பில் ஆயுத ஒப்பந்தம் குறித்து பிரச்னைகள் தீர வாய்ப்புள்ளது.  



பிரபலமான இடுகைகள்