என்னுடைய லினக்ஸ் எது? கட்டற்ற அறிவு!







Related image



கட்டற்ற அறிவு -– வின்சென்ட் காபோ

லினக்ஸ் வகைகளும் இயக்கமும்

Suse Linux

ஜெர்மனியைச் சேர்ந்த நிறுவனத்தின் லினக்ஸ் தயாரிப்பு. சேவை, மென்பொருள் என அனைத்தும் நேர்த்தி. 

Slackware/archi linux

பெரும்பாலும் சர்வருக்கு பயன்படுத்தும் லினக்ஸ் ஓஎஸ் இது. நாவெல், விஎம்வேர் என கைமாறி தரம் குறையாமல் வெளியாகும் லினக்ஸ் இது. ரெட்ஹேட் இன்ஸ்டாலரை நம்பியுள்ளது மைனஸ்.

Debian

உபுண்டு/ லினக்ஸ் மின்ட் போன்ற லினக்ஸ் போன்ற எளிய லினக்ஸ்தான் இதுவும்.
லினக்ஸ் வெளியீடு அப்டேட் என்பதை எண்களை வைத்து தீர்மானிக்கும் தவறை பலரும் செய்கிறார்கள். ஸ்லேக்வேரின் எடிஷன் 10 என்பதும் டெபியனின் 4.1 என்பதும் தரத்திலும் அப்டேட்டிலும் இணையானது.

லினக்ஸை நிறுவுவதில் டெபியன்(.DEB), ஆர்பிஎம்(.RPM) எனும் பேக்கேஜ்முறைகள் உண்டு. பைனரி பேக்கேஜ், சோர்ஸ் பேக்கேஜ் என இருமுறைகளில் இன்ஸ்டால் செய்வது வழக்கம். பெரும்பாலும் பயனர்கள் பயன்படுத்துவது சோர்ஸ் பேக்கேஜ் முறையையே. இன்ஸ்டால் செய்வதற்கான மென்பொருட்களை Freecode.com இணையதளத்தில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

லினக்ஸ் இன்டெல் G3,G5, ஏஎம்டி சிப்செட்டிலும்,  ஸ்பார்க், அடாரி, அமிகா, ஏஆர்எம் முறையில் அமைந்த கணினிகளிலும் லினக்ஸ் சிறப்பாக இயங்கும். கிராபிக் செயல்பாடுகளை செய்யாதபோது ஒரு ஜிபி ராம் திறன் லினக்ஸில் போதுமானது. லினக்ஸ் இன்ஸ்டால் ஆவதற்கு எடுத்துக்கொள்வதும் குறைவான சேமித்திறனே. கிராபிக் செயல்பாடுகளை செய்ய இரண்டு ஜி.பி ராம் இருந்தால் போதுமானது. சர்வர் சார்ந்த செயல்பாடுகளை செய்ய 4ஜிபி –- எட்டு ஜிபி போதுமானது.

ஹார்ட்டிஸ்கில் லினக்ஸ் எடுத்துக்கொள்ளும் இடம் 20 ஜிபி மட்டுமே. பொதுவாக லினக்ஸை நிறுவ 2 ஜிபி ராம், ஹார்ட்டிஸ்கில் 40 ஜிபி இடம் தேவை. யுஎஸ்பியில் நிறுவ 2ஜபி தாண்டிய நினைவகத்திறன் தேவை.

லினக்ஸை எப்படி நிறுவது என்பதை மிக எளிமையாக விளக்கும் யூட்யூப் வீடியோக்கள் உண்டு. அதில் நிறுவுவதற்கான மென்பொருட்களை .DEB, .RPM வடிவில் பெறலாம். 

விண்டோஸில் உள்ள மென்பொருட்கள் .exe வடிவில் இருக்கும். .tar.gz என்ற வடிவிலும் மென்பொருட்ளை இணையத்தில் தரவிறக்கி பயன்படுத்தலாம். இது ஸிப் வடிவிலுள்ள கோப்புகளை போலத்தான். இதில் சோர்ஸ்கோடும் இணைந்துவரும்.


பிரபலமான இடுகைகள்