மைக்ரோசாஃப்ட் உதயம்! - கட்டற்ற அறிவு (அத்.8)








Image result for microsoft logo



கட்டற்ற அறிவு – வின்சென்ட் காபோ

8
மைக்ரோசாஃப்ட் உதயம்!

ஆனால் இது முழுமையாக ஜிஎன்யுவை குறிக்காது என்றாலும் இது ஓரளவுக்கு கட்டற்ற மென்பொருள் கருத்தை மக்களுக்கு நினைவுக்கு கொண்டு வருகிறது. சுதந்திரமா, இலவசமாக என்று வந்தபோது லினக்ஸ் ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு மாறுபட்ட கருத்துக்களை கொண்டிருந்தார்கள். மென்பொருட்களை காசுகொடுத்து வாங்குவதை விட அது பயனருக்கு அளிக்கும் சுதந்திரத்தை ஸ்டால்மன் முக்கியமாக கருதினார்.

லினக்ஸின் தொடக்கம்

தற்போது பயன்படும் லினக்ஸின் தொடக்கம் 1969 ஆம் ஆண்டு ஏடி&டி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட யூனிக்ஸ் ஓஎஸ் மூலம் தொடங்குகிறது. கட்டணத்திற்கு வெளியிடப்பட்ட இந்த ஓஎஸ்ஸில் பல வெரைட்டிகள் அன்று வெளியாயின. இன்றும் பல்வேறு டெக் நிறுவனங்களில் யூனிக்ஸ் ஓஎஸ் பயன்பாட்டில் உள்ளது. இதில் பிரபலமானவை, சன்மைக்ரோ சிஸ்டம்(தற்போது ஆரக்கிள்) சோலாரிஸ், ஹெச்பி(யூஎக்ஸ்), பெர்க்கிலி ப்ரீபிஎஸ்டி ஆகியவை.

1984 ஆம் ஆண்டு ஹியூலெட் பெக்கார்ட் நிறுவனத்தில் வெளியான யூனிக்ஸ் பதிப்பு. இன்றுவரையும் பயன்பாட்டிலுள்ளது.
1993 ஆம் ஆண்டு வெளியான சோலாரிஸ் யூனிக்ஸ் வணிகரீதியில் மெகா ஹிட். இலவசமாக வழங்கப்பட்டிருக்கொண்டிருந்த லினக்ஸூக்கு இணையாக வளர்ந்த யூனிக்ஸ் பதிப்பு இது.

இன்று மேக் ஓஎஸ் பெர்க்கிலி பிஎஸ்டியை அடிப்படையாக கொண்டு உருவானது. எப்படி? யூனிக்ஸ் ஹிட் அடிக்க முக்கியக்காரணம், குறைவான விலை, பல்வேறு விஷயங்களை அதில் செய்ய முடிந்ததுதான். சி மொழி, இன்டர்நெட் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியதே யூனிக்ஸ்தான். இதன் அப்டேட் ஓஎஸ்தான் லினக்ஸ். ஆனால் யூனிக்ஸ் ஏன் பரவலாகவில்லை? யூனிக்ஸில் ஏராளமான கமாண்ட்டிங் வரிகளை பயன்படுத்தும் நிர்பந்தம் இருந்ததும், யூனிக்ஸை வணிகரீதியில் பயன்படுத்துவதிலிருந்த காப்புரிமை சிக்கல்களும் அதன் பரவலை தடுத்தன.

அப்போது கணினி பயனர்களுக்கு நம்பிக்கை தரும் விதமாக 1980 ஆம் ஆண்டு ஆப்பிளின் எக்ஸ் விண்டோஸ் எனும் கிராபிகல் இன்டர்ஃபேஸ் வசதிகொண்ட புரட்சிகரமான ஓஎஸ் கண்டறியப்பட்டது. கணினியின் வண்ணம், வடிவமைப்பு, ஒலி என அனைத்தும் பார்த்து பார்த்து செய்யப்பட்ட கணினி இது. இதற்கடுத்த ஆண்டு மைக்ரோசாஃப்டின் எம்எஸ்-டாஸ்(வெர்ஷன் 3) ஓஎஸ் வெளியிடப்பட்டது.

பிரபலமான இடுகைகள்