தேசியவாதியா? தேசதுரோகியா? -தலை மர்மம்


கவிஞரின் தலை மர்மம்!
Image result for Patriot or Traitor: The Life and Death of Sir Walter Raleigh,

ராஜதுரோக குற்றச்சாட்டிற்காக தலை துண்டிக்கப்பட்ட இங்கிலாந்தைச் சேர்ந்த கவிஞர் வால்டர் ராலெய்க்கு(1552-1618), இந்த ஆண்டு 400 ஆம் ஆண்டு நினைவுதினம். துண்டிக்கப்பட்ட தலை சிவப்பு வெல்வெட் பையில் வைக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் அவரது தலை எங்கே என்ற மர்மம் இன்றுவரையிலும் நிலவி வருகிறது.


வால்டரின் உடலை புதைத்த அரசு, தலையை மனைவி எலிசபெத்திடம் கொடுத்ததாகவும் அவர் தான் இறக்கும்வரை அதனை பதப்படுத்தி பாதுகாத்ததாகவும் தி கார்டியன் நாளிதழ் தகவல் தெரிவிக்கிறது. “1665 ஆம் ஆண்டு வால்டரின் மகன் கேரியூ எஸ்டேட்டை விற்றார். அதற்குப்பிறகு சிவப்புபை பற்றிய விஷயங்களை தெரியவில்லை” என்கிறார் வால்டரின் கட்டிடங்களை நிர்வகிக்கும் அறக்கட்டளை தலைவர் பீட்டர் பியர்ஸ். Patriot or Traitor: The Life and Death of Sir Walter Raleigh, ளை நூலை எழுதியவரான அன்னா பீர், வெட்டப்பட்ட தலையை பதப்படுத்தியிருந்தாலும் அதில் சிறு ரத்தக்கறையேனும் இருக்கும். எப்படி புதிதாக இருக்கமுடியும்? என லாஜிக் கேள்வி கேட்கிறார். வரலாற்றில் நிறைய மர்மங்கள் காரணங்கள் இல்லாமல் உண்டு. அதில் வால்டரின் தலை புதிய வரவு அவ்வளவுதான்.