பிரிவினையின் தொடக்கம்!


இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரும் படுகொலை!
Image result for partition and gandhi




இரண்டாம் உலகப்போர் முடிந்தபோது இங்கிலாந்து அரசு திவால் நிலையில் இருந்தது. தனது வீரர்களை இந்தியாவில் அதற்கு மேல் தங்க வைக்கமுடியாத சங்கடத்தில் தவித்தபோது பிரிவினை அவலம் நிகழ்ந்து 15 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்தனர்.


1946, மார்ச் 1946

ஆங்கிலேய அரசு அதிகாரத்தை மாற்றுவது தொடர்பாக யோசித்து சிம்லாவில் இதுதொடர்பாக பேச முயற்சித்தது. காங்கிரஸ், முஸ்லீம் லீக் சார்பாக ஜின்னா, நேரு ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

சிறுபான்மையினரான முஸ்லீம்களின் தலைவரான ஜின்னா, காங்கிரசின் தலைமையில் இணைந்திருக்க சம்மதிக்காததால் மாநாடு தோல்வியுற்றது. அன்று ரேடியோவில் மக்கள் கேட்டது இச்செய்தியைத்தான். மாநாடு தோல்வியுற்றதும் பல்வேறு இடங்களில் கலவரங்கள் தொடங்கின.

1946 ஆகஸ்ட்

பிரிவினை குறித்த செய்தியை காந்தி கேட்டபோது மகாராஷ்டிராவிலுள்ள சேவா ஆசிரமத்திலிருந்தார்.  விரைவிலேயே கல்கத்தாவில் இந்துகள் 5 ஆயிரம் பேர் கொல்லப்பட்ட செய்தி கிடைத்தபோது கலங்கிப்போனார்.  கண்ணுக்கு கண் என அடித்துக்கொண்டால் முழு உலகமும் பார்வையற்றுப்போய்விடும் என தனக்குள் விரக்தியுடன் முணுமுணுத்தார்.

வேதனையில் கண்களில் நீர் திரள, வைஷ்ணவ ஜனதோ, தெனே கஹியே ஜே பீட் பராயி ஜானே ரே பர துகே உபகார கரே டோ யே மன அபிமன நானே ரே என்ற சுலோகனை உச்சரித்தார். பிறரது வேதனையை வைஷ்ணவன் உணர்ந்து அவர்களுக்கு உதவுவதே அவனது பெருமை என்பதே இதன் பொருள்.

காந்தி ஜின்னாவுக்குமிடையே உள்ள உறவை நினைத்து பார்த்துப் பார்த்தார். 1940 ஆம் ஆண்டு அவரை சந்தித்தபோது முஸ்லீம்களுக்கான தனி நாட்டை அவர் அப்போதே வலியுறுத்தியிருந்தார். காந்திக்கு இந்தியா ஒரே நாடாக இருக்கவேண்டும் என்பதுதான் ஆசை. ஆனால் காங்கிரசையோ இந்துக்களையோ ஜின்னா நம்பவில்லை. இங்கிலாந்தில் கல்வி கற்ற ஜின்னா, முஸ்லீம்களின் தனிப்பெரும் தலைவரான தருணம் அது.


1948 ஆம் ஆண்டு ஜூனில் ஆங்கிலேய அரசு ஆட்சியை இந்தியர்களிடம் ஒப்படைத்து விட்டு செல்ல முடிவெடுத்த போது, பீகார், பஞ்சாப், பாம்பேயில் கலவரங்கள் தொடங்கின. 1947 ஆம் ஆண்டில் தற்போதைய வங்கதேசத்தில் கலவரங்கள் நடக்கத்தொடங்கியபோது கலவரத்தை நிறுத்த தன்னாலான அத்தனை முயற்சிகளையும் காந்தி செய்தார்.

நான் வெறும் கால்களில் நடக்கப்போகிறேன் என்று கூறியவர் கால் பிய்ந்துபோயும் நிற்காமல் ஈஸ்வர அல்லா தேரா நாம் சப்கோ சம்மதி தே பகவான் என்ற பாடலை பாடியபடி பல்வேறு கிராமங்களை கடந்து சென்றார். ஆனால் சில கிராமங்கள் சாதி கலவரங்களால் எரிக்கப்பட்டு கிடந்ததை பார்த்து நொந்துபோனார். எனவே காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் காந்தி சில கிராமங்களை கடக்கும் முன்பு அதனை சீர்படுத்தி வைத்தனர். வடமேற்கு பகுதியிலிருந்த லாகூர் கூட எரிக்கப்பட்டிருந்தது. 50 ஆயிரம் சதுர மைல்களை நூறு போலீசார் காவல் காத்து வந்தனர். ஏறத்தாழ ஒருங்கிணைந்த இந்தியக்குடியரசு என்ற கனவு அழிந்த கணம் அது.


மார்ச்

டெல்லி வைஸ்‌ராயாக இருந்த மவுண்ட்பேட்டன்  இந்தியா உடையும் முன்பே நாங்கள் கிளம்புகிறோம் என்று கூறியபின்னரே வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூன் 3 அன்று நேரு, ஜின்னா, மவுண்ட்பேட்டன் பாக். உருவாக ஒப்புதல் அளித்து பேச கலவரம் புது வேகத்தில் இந்தியாவை பற்றியது.

"எனது மாமா உள்ளிட்ட நாங்கள் அனைவரும் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் வாழ்ந்துவந்தோம். பாக். பிரிக்கப்பட்ட செய்தியைக் கேட்டதும் ஏற்பட்ட கலவரத்தில் தங்கள் வீட்டு பெண்களை சீக்கியர்கள் கொல்லத் தொடங்கினர். முஸ்லீம்களிடம் சீக்கியப் பெண்கள் சிக்கி வல்லுறவு செய்யப்படக்கூடாது என்ற காரணத்திற்காகத்தான் அப்படுகொலைகளை நிகழ்த்தினர். சீக்கியர்களின் வீடுகளில் பெண்கள் அலறும் சத்தத்தை என்றும் மறக்கவே முடியாது" என பதற்றம் நீங்காத குரலில் பேசுகிறார் பீர் பகதூர்.

சீக்கியர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த கிராமங்களில் முஸ்லீம்கள் கருணையின்றி வெட்டி கொல்லப்பட்டனர். ஜூன் 4 அன்று , மவுண்ட்பேட்டன் பத்திரிகையாளர்களை கூட்டி ஆக.15, 1948 அன்று இந்தியா குடியரசு நாடாக மலரும் என்ற செய்தியை வெளியிட்டார். மூன்றுமாதம் இருக்கிறதே என இந்தியர்கள் அனைவரும் அதிர்ச்சியாக, எல்லைக்கோட்டை வரைவதற்காகத்தான் இந்த காலம் கூறினார் பாரிஸ்டரான சிரில் ரெட்கிளிப். 36 நாட்களில் இந்தியா - பாகிஸ்தானிற்கான எல்லைக்கோட்டை வரைந்து கொடுத்துவிட்டார்.

1947 ஆகஸ்ட்

மவுண்ட்பேட்டன் தனது 5 ஆயிரம் பேர் வேலை பார்க்கும் அலுவலகத்தில் காலண்டரை மாட்டினார். அதில் இந்தியாவை விட்டு விலகுவதற்கான நாட்கள் காட்டப்பட்டன. பள்ளிகள், கல்லூரிகள், வங்கிகள், அனைத்தும் அப்போது இந்துகள் வசமேயிருந்தன. சுதந்திரத்திற்கு ஒருமாதம் முன்பே பெரும்பாலான ஆங்கிலேய வீரர்கள் இங்கிலாந்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டனர். லாகூர் பாகிஸ்தானிற்கு சென்றுவிடும் என வதந்தி பரவ இந்துக்கள் தங்கள் சொத்துக்களை விட்டுவிட்டு இந்தியாவிற்கு ஓடிவந்தனர். இந்து - முஸ்லீம் பிரிவினை கலவரம், இறப்பு 20 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய அவலம் என வரலாற்றில் இடம்பிடித்தது

ஆகஸ்ட் 14 அன்று பாகிஸ்தான் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் பெற்ற தினத்தில் கொடியேற்றி நேரு பேசினார். "இந்தியா கடும் போராட்டத்திற்கு பிறகு சுதந்திரமாக தனி நாடாக மாறியுள்ளது" என்றார். ஆனால் அப்போது சுதந்திர நாட்டிற்கான கொண்டாட்டத்தில் பலரும் இல்லை. காந்தி இந்து - முஸ்லீம் ஒற்றுமைக்காக உண்ணாநோன்பு கடைபிடித்து வந்தார்.

-தமிழில் : ச.அன்பரசு
நன்றி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்












பிரபலமான இடுகைகள்