எழுத்தாளராக பாக்.கில் வாழ்வது கடினம்!
நேர்காணல்!
“பாகிஸ்தானில் எழுத்தாளராக உயிர்வாழ்வது
கடினம்!”
முகமது ஹனிஃப், பாகிஸ்தானிய எழுத்தாளர்
தமிழில்: ச.அன்பரசு
பாகிஸ்தான் அரசியலைப் பற்றி வெளியே
இருந்துதான் எழுதமுடியும் என தி கார்டியன் நாளிதழில் எழுதியுள்ளீர்கள். அப்படியென்ன
பிரச்னையை சந்தித்தீர்கள்?
பாகிஸ்தானில் பத்திரிகையாளர்கள்
பலருக்கும் மூச்சுவிடமுடியாத சூழல்தான் உள்ளது. Dawn நாளிதழில் நான் சென்றாண்டு எழுதிய
கட்டுரைக்காக அதன் துணை ஆசிரியர் ராஜதுரோக குற்றச்சாட்டுக்கு ஆளானார். என்னால் பிறரின்
வாழ்க்கை அபாயத்தில் சிக்குவதை நான் விரும்பவில்லை. பாகிஸ்தானிலிருந்து வெளிநாட்டு
பத்திரிகைகளில் எழுதினாலும் தேசதுரோகி என சித்தரிக்கப்படும் அபாயம் அங்கு நிலவுகிறது.
எ கேஸ் ஆஃப் எக்ஸ்ப்ளோடிங் மேங்கோஸ்
நூலில் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு வந்த வழி பற்றி விவரித்திருந்தீர்கள். புதிய
நூலான ரெட் பேர்ட்ஸ் எழுதுவதற்கு எளிதாக இருந்ததா?
நாவல் எழுதுவதிலுள்ள ஆபத்து, உங்களுக்கு
சலிப்பு ஏற்படாமல் எழுதுவதோடு வாசகருக்கும் அந்த அனுபவம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதே.
தொடங்கிய நாவலை வெற்றிகரமாக முடிக்கவேண்டும் என்னை விரட்டும் பெரும் பயம். எழுதுவதும்
அதேவேகத்தில் நூல்களை வாசிப்பதும் இப்பயங்களை மனதிலிருந்து விரட்டுகிறது. எழுத்தாளர், பத்திரிகையாளர், கல்வி அறிவுள்ள பலுசிஸ்தான்,
சிறுபான்மையினர் என எதுவாக இருந்தாலும் பாகிஸ்தானில் ஆபத்துதான். பத்திரிகையாளராக இருப்பதால்
எழுத்தாளரின் சொகுசு கிடைப்பதில்லை. ஆனால் சன்னி முஸ்லீமாக இருப்பதாலும் பூர்விக பஞ்சாப்வாசி
என்பதும் பாதுகாப்பு தருகிறது.
போரின் அபத்தங்களையும் அமைதி கிடைக்க
வாய்ப்பில்லை எனவும் உறுதியாக கூறுகிறீர்கள். புதிய தலைமுறைக்கு நாம் சிறந்த உலகத்தை
அளிக்கமுடியும் என்ற நம்பிக்கை இழந்துவிட்டீர்களா?
அடுத்த தலைமுறைக்கு சிறந்த உலகை
அளிக்கும் வாய்ப்பை என்றோ தவறவிட்டுவிட்டோம். போர் கொடூரங்களை சாப்பிடும்போது டிவி
வழியே பார்க்கும் எவ்வித உணர்ச்சியுமின்றி பார்க்கும் அளவுக்கு பழகிவிட்டோம். துருவக்கரடிகள்
இறந்துவரும் நிலையில் நிலத்தடி நீரையும் இன்றே பெருமளவு பயன்படுத்திவிட்டோம். புதிய
தலைமுறை பற்றி இரங்கி அழுதாலும் நிலைமை மாறாது.
பாகிஸ்தானிலுள்ள உருதுமொழி பத்திரிகைகளில்
எழுதும் எண்ணமிருக்கிறதா?
என் தாய்மொழி பஞ்சாபி. பத்திரிகையாளராக
வாழ்க்கையை தொடங்கியதும் பஞ்சாபி பத்திரிகைகளில்தான். உருதில் எழுத பிபிசி பஞ்சாபிக்கு
செல்லலாம். அதில் பிரிவினை குறித்தவற்றை வீடியோ பதிவுகளாக்க முடியும். என்னுடைய கிராமத்திலு
உருது கட்டுரைகள், ஆங்கில நூல்களை விட வாட்ஸ் அப் வழியாக என் பஞ்சாபி மொழிப்பேச்சை
மக்கள் கேட்கிறார்கள்.
நாவல், நாடகம், இசைநாடகம்(பூட்டோ)
என பல்வேறு வடிவங்களை முயற்சித்துவிட்டீர்கள். உங்களுக்கு பிடித்தது எது?
எனக்கு எழுதுவதை விட நண்பர்களுடன்
அமர்ந்து கதைகளை பகிர்ந்து பாடல்களை பாடிக்கொண்டிருப்பதையே விரும்புகிறேன். நாவலை எழுத
இரண்டு ஆண்டுகள் தேவைப்படுவதால் அக்கதாபாத்திரங்களுடன் வாழ்வது எனக்கு பிடித்திருக்கிறது.
பொருளாதாரரீதியாகவும் எழுத்து எனக்கு உதவுகிறது என்பதால் எழுத்தை தேர்ந்தெடுக்கிறேன்.
உங்களுடைய சிறுவயதில் “அஹ்மதி
இனத்தினர் சமய நம்பிக்கையற்றவர்கள் என்பதால் அவர்களிடம் நாம் பொருட்களை வாங்க கூடாது
என்கிறீர்களா?” என ஆசிரியரிடம் கேள்வி கேட்டு அடிவாங்கியுள்ளீர்கள். அண்மையில் பாகிஸ்தானின்
பொருளாதார ஆலோசனை கவுன்சிலிலிருந்து அடிஃப் மியான் நீக்கப்பட்டுள்ளார் என்பதை எப்படி
பார்க்கிறீர்கள்.
நான் இரண்டாம் வகுப்பு படிக்கும்போது
நடந்த சம்பவம் அது. பாக்.நாடாளுமன்றம் அஹ்மெதியர்களை காபிர் என அறிவித்ததை எண்ணி நாங்கள்
கடும்வேதனை அடைந்தோம். சொந்தமக்களை துன்புறுத்த புதிய பெயர்களை தேடி அம்முயற்சியில்
அவர்கள் வென்றுவிட்டார்களோ என்று தோன்றுகிறது.
நன்றி: Ziya us Salam,frontline.in,Jai
arunsingh,Scroll.in