ஹோவர்பைக் போலீஸ்!- தயாராகிறது க்ரைம்படை
போலீசுக்கு வாகனப்பயிற்சி!
அமெரிக்காவைச் சேர்ந்த ஹோவர்சர்ஃப்
நிறுவனம் துபாய் போலீசாருக்கு ஹோவர்பைக்கில் பறந்துசென்று குற்றங்களை குறைப்பதற்கான
பயிற்சிகளை அளித்துவருகிறது.
2020 ஆம் ஆண்டில் ஹோவர் பைக்கில்
போலீஸ்காரர்கள் குற்றங்களை குறைக்க வானில் பறந்துவருவது விரைவில் சாத்தியமாகலாம். ஹோவர்சர்ஃப்
நிறுவனம், s3 எனும் ஹோவர்பைக்கை போலீசாருக்கு பயிற்சியளிக்க அளித்துள்ளது.
“தற்போது ஹோவர் பைக்கில் இருகுழுக்கள்
பயிற்சி எடுத்துள்ளனர்.விரைவில் இந்த எண்ணிக்கையை அதிகரிப்போம்” என்கிறார் பிரிகேடியர்
காலித் நாசர் அல்ராஸூக்கி. ஹோவர் சர்ஃப் நிறுவனத்திடம் 1,50,000 டாலர்களை கட்டினால்
தனியாகவும் ஹோவர்பைக்கை வாங்கி பறக்கமுடியும். விமானத்துறை அனுமதி வாங்கினால் போதும்;
இதற்கென தனிலைசென்ஸ் தேவையில்லை.
evTol எனும் இவ்வாகனம் பேட்டரியால்
இயங்க்கூடியது. இதில் கிராபீன் பயன்படுத்தும்போது எடைகுறைந்து பறக்கும் திறன் எதிர்காலத்தில்
கூடலாம். நூறு ஹோவர் பைக்குகளை துபாய் வாங்கவுள்ளது. இதில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்படலாம்.
உலகிலேயே மணிக்கு 253 கி.மீ வேகத்தில் பாயும் அதிவேக போலீஸ்காரை துபாய் மட்டுமே வைத்துள்ளது
குறிப்பிடத்தக்கது.