ஜார்ஜியா பெண் சிங்கங்கள்!
ஜார்ஜியாவின் 3 பெண்கள்!
ஜார்ஜியாவிலுள்ள ஐடா டகியேவா(29),
பதினொரு பேர் கொண்ட அலியேவ் அசர்பைஜானி நாடக அமைப்பில் நடிக்கும் மூன்று பெண்களில்
ஒருவர். “எங்கள் சமூகம் நாடகங்களில் பெண்களின் இருப்பை விரும்புவதில்லை. படிப்பதில்
ஆர்வமில்லாதவர்களை நாடகங்களில் ஆர்வமூட்டி நாடகம் பார்க்க வைப்பது எளிதல்ல” என்கிறார்
ஐடா டகியேவா. 16 வயதிலிருந்து நாடகங்களில் நடிப்பவரின் நாடக சம்பளம் 122 டாலர்கள்.
ஜார்ஜியாவின் மர்னூலியில் ரேடியோ
மர்னூலி என்ற வானொலி நிலையத்தை நடத்தி வருகிறார் பத்திரிகையாளர் கமிலா மம்மடோவா(33).
பிபிசி திட்டத்திற்காக தொடங்கிய ரேடியோவை ஜார்ஜியா மற்றும் அசர்பைஜான் செய்திகளை ஒலிபரப்பிவருகிறார்.
கருத்துக்களை யாரும் வந்து ரேடியோவில் பகிர்ந்துகொள்ளலாம் என்பது கமிலா தரும் சுதந்திரம். “என்னை லெஸ்பியன் என்று
திட்டினாலும் உண்மையை தடுத்து நிறுத்த முடியாது.” என்கிறார் இதழியல் மற்றும் சட்டப்பட்டதாரியான
கமிலா.
யுனைடெட் நேஷ்னல் மூவ்மென்ட் கட்சியை
சேர்ந்தவரான சமிரா இஸ்மையிலோவா, அரசியல் வட்டாரத்தில் நுழையும்போது பல்வேறு மிரட்டல்களை
சந்தித்து துணிவோடு அநீதிகளை எதிர்த்து சிறுபான்மையினருக்காக குரல் கொடுத்து வருகிறார்.