வரலாற்றில் இடம்பிடித்த படுகொலை!






Image result for gandhi assassination



1948, ஜனவரி 30.

நியூடெல்லியிலுள்ள பிர்லா இல்லத்தில் காங்கிரஸ் தலைவர் சர்தார் படேலுடன் தீவிரமான விவாதத்தில் ஈடுபட்டிருந்தார் காந்தி. அப்போது கட்சி வட்டாரங்களில் படேலுக்கும் நேருவுக்கும் கருத்து முரண்பாடுகள் தோன்றியுள்ளதாக விஷயம் பேசப்பட்டு வர அதனை முளையிலேயே கிள்ள காந்தி நினைத்தார். படேலிடம் விஷயங்களை பேசிவிட்டு நிமிர்ந்து பார்த்த காந்திக்கு ஐந்து மணியாக ஐந்து நிமிடங்களே இருப்பது கண்டு பதட்டமானார்.

பிரார்த்தனைக்கு நேரமாச்சு நான் கிளம்பரேன் என எழ முயன்றவருக்கு அவரின் பேத்தி மனு கைகொடுத்து உதவினாள். பிரார்த்தனை கூடத்தில் அப்போதே திரளான மக்கள் கூடியிருந்தனர். கூடியிருந்தவர்களில் காங்கிரஸ் தொப்பிகளே அதிகம். பிரார்த்தனை கூடத்திற்கு மனுவின் தோள் மீது கைவைத்தபடி காந்தி நடந்து வர, அதுவரை முணுமுணுத்த கூட்டத்தினரின் பேச்சொலிகள் மெல்ல குறைந்தன. மூன்று படிகள் மிச்சமிருக்க அப்போது திடீரென காந்தியின் முன்னே நன்கு அகலமான தோள்களைக் கொண்ட காக்கி நிற சட்டை, பேன்ட் அணிந்தவர் வந்து நின்று காந்தியின் கண்களை நேருக்கு நேராக பார்த்து நமஸ்தே என்றார்.

எரிச்சலான மனு பாபுவுக்கு இப்போதே பத்து நிமிடம் தாமதமாகிவிட்டது வழிவிடுங்கள் என சொல்ல, காக்கி சட்டை வாலிபர் நேரடியாக செயலிலேயே இறங்கினார். மனுவை கையால் ஒருபுறம் தள்ளி பேன்டிலிருந்த பெரட்ட எம் 1934 பிஸ்டலை வேகமாக எடுத்து மூன்று தோட்டாக்களை காந்தியின் நெஞ்சில் பாய்ச்ச, காந்தியிடமிருந்து ராம் ராம் என்ற சொற்கள் வெளியேற அப்படியே கீழே சரிந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த அதிர்ச்சி நிகழ்வை பலரும் ஜீரணிக்க முடியாமல் பார்த்தபடியிருந்தனர். உடனே செயல்பட்ட அமெரிக்க தூதர அதிகாரி ஹெர்பர்ட் ரெய்னர் ஜூனியர் கோட்சேவை மடக்கி போலீசிடம் ஒப்படைத்தார்.

உடனே காந்தி அவரது அறைக்கு கொண்டு சென்றாலும் மருத்துவர்களோ, ஆம்புலன்சோ இல்லாத துயரான நிலை. துளைத்த தோட்டாக்களின் விளைவாக ரத்தம் கைத்தாங்கலாக தூக்கியவர்களின் கைகளை நனைத்து கீழே சொட்டி வழிந்தது. அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து பார்த்து காந்தியை சோதித்தபோதே அவரின் கண்கள் அந்தரத்தில் நிலைத்துவிட்டன. அந்த கணமே நாதுராம் கோட்சே யாராலும் மறக்கமுடியாதபடி வரலாற்றில் இடம்பிடித்துவிட்டார்.


காந்தியின் மறைவை அதிகாரப்பூர்வமாக அறிவித்து பேசிய நேரு, நம் வாழ்விலிருந்த ஒளி மறைந்துவிட்டது. இருட்டு எங்கும் வியாபித்துள்ளது என்று கூறினார்.

அடுத்தநாள் மதியம் 1.30 அன்று காந்தியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. பலரும் அழுகையும் கோபமுமாக விரக்தியுமாக பங்கேற்ற அண்ணலின் இறுதி ஊர்வலம் மெல்ல நகரத்தொடங்கியது. மாலை 4.45 க்கும் ராஜ்காட்டில் காந்தியின் மகன்களான ஹரிலால், ராம்தாஸ், தேவ்தாஸ் உடலுக்கு நெருப்பிட அகிம்சை தத்துவத்தை உலகிற்கு அளித்த காந்தி மெல்ல சாம்பலாகி காற்றில் கலந்தார்.


குற்றமும் தண்டனையும்!

இந்து மகாசபை உறுப்பினரான கோட்ஸே முஸ்லீம்களுக்கு பிரிவினை சம்பவத்தையொட்டி ஆதரவு தெரிவித்து பேசியது தீவிர வெறுப்பை உருவாக்கியிருந்தது பின்னாளில் தெரிய வந்தது. 1949 ஆம் ஆண்டு நவ. 8 அன்று பஞ்சாப் உயர்நீதிமன்றம் கோட்ஸேவுக்கு தூக்கு தண்டனை விதித்தது. அதே ஆண்டில் நவ.15 அன்று அம்பாலா சிறையில் கோட்ஸேவின் உடல் தூக்கு கயிற்றில் தொங்கவிடப்பட்டது.


ஆக்கம்: ச.அன்பரசு
நன்றி: செவ்லின் செபாஸ்டியன், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்