முதுகுளத்தூரில் நடந்த உண்மை!

முதுகுளத்தூர் பயங்கரம் - கலவரம்!
தொகுப்பு: மயிலை நாதன்
எழுத்தாக்கம்: டி.எஸ்.சொக்கலிங்கம் - தினகரன்
வெளியீடு: சிந்தனை
ரூ.90


Image result for முதுகுளத்தூர் கலவரம்




டி.எஸ்.சொக்கலிங்கம் -தினகரன் ஆகியோர் முதுகுளத்தூரில் களசாட்சியாக நின்று பதிவு செய்த தரவுகளை எழுதியுள்ளனர். மு.தே எப்படி அங்குள்ள படிப்பறிவற்ற தன் இன மக்களை அவர்களின் பிரச்னைகளுக்கு பிற இனத்தவர்கள் காரணம் என வன்முறையை தூண்டிய வரலாற்றை துல்லியமாக பதிவு செய்துள்ளனர். 

காங்கிரஸ் இக்காலகட்டங்களில் செய்த தவறு, ஜாதி ஆதிக்கத்தை கையிலெடுத்து தன்னுடைய கிராமங்களில் குறுமன்னர் போல ஆண்டு வந்த மு.தேவரை  தேர்தலில் தன் கட்சி வேட்பாளராக நிறுத்தியதுதான். பின்னாளில் காங்கிரஸ் கட்சியின் தவறை முதல்வர் காமராஜர் நேர் செய்தார். 

முதுகுளத்தூர் பகுதியில் பள்ளர்களை மு.தே தமக்கு மட்டுமே வாக்களிக்க பிராமிசரி நோட்டில் கையெழுத்து வாங்குமளவு நிலைமை மாறியிருந்ததும், காங்கிரசுக்கு ஆதரவாக ஓட்டு போட்டவர்களை தாக்கியதும், விளைச்சலை கொள்ளையிட்டதையும், பெண்களை வல்லுறவு செய்ததும், நிலவரி கேட்ட அரசு அதிகாரிகளை தாக்கி காலை வெட்டியதும் படிக்கும்போதே பீதி ஏற்படுத்தும் நிகழ்வுகள். 

சாலை, குடிநீர் வசதி கூட தன் தொகுதிக்கு கேட்காமல் மக்களை இறந்தகாலத்திலேயே வைத்திருந்து தனக்கு பயன்படுத்திக்கொண்டதும், அரசியல் உரிமைகளையும் கூலி உயர்வையும் கேட்ட இம்மானுவேல் சேகரனை அடிப்பொடிகளை தூண்டி விட்டு கொன்றதும், விசாரணைக்கமிஷனுக்கு பள்ளர்கள் சாட்சி சொல்வதை தடுக்க அலுவலகத்தின் முன்பு வண்டியில் காவல் காத்த அவலத்தையும் நூல் விவரிக்கையில் தமிழ்நாட்டில் குருபூஜை கோமாளித்தனங்களில் ஒவ்வொரு கட்சியினரும் மு.தே சிலைக்கு மரியாதை செய்து கொண்டிருந்தனர். அரசியலமைப்பில் உள்ள அடிப்படை உரிமைகளை எல்லாம் நாம் பெற்றுவிட்டோமா? அதேபோல்தான் இதுவும். 

பெரியார் இச்சம்பவங்களில் யார் பக்கம் நின்றார் என்பதையும் நூல் பதிவு செய்திருக்கிறது. அப்போது பிராமணர்கள் நடத்திய தினமணி, கல்கியில் தேவர்-பள்ளர் கலவரத்தில் அரசை மட்டுமே குற்றம் சாட்டியதையும் விடுதலை நாளிதழில் கள நிலவரங்களை சரியாக எழுதிய பிரச்னைகளை நேர்பட பேசியதையும் பதிவு செய்துள்ளது பாராட்டத்தக்கது. 

நூலில் ஸ்கேன் செய்த பக்கங்கள் சரியாக படிக்க முடியாதது குறை.  நடந்த கலவரத்தை புரிந்துகொள்ளாமல் இறந்தவர்களின் புனிதங்களை பேசுபவர்களுக்கு  பாடம் நடத்த அவசியமில்லை. ஏனெனில் உண்மையை அறிய ஆர்வமே இல்லை என்றால் நாம் என்ன செய்ய முடியும்? வெங்கடேசுவரன் கமிட்டி அறிக்கை இந்தவகையில் ஐந்து மறவர்களை போலீஸ் தனியாக நிறுத்தி சுட்டுக்கொன்றதாக பதிவு செய்ததை எப்படி என முதல் தகவல் பதிவான நேரத்திலிருந்து விளக்கியிருப்பது அருமை. 



-கோமாளிமேடை டீம்
நன்றி: இரா.முருகானந்தம்,தாராபுரம்