குரோம்புக்கில் என்ன புதுசு?


டெக் புதுசு!


Image result for hp chromebook x2

HP CHROMEBOOK X2
மார்க்கெட்டிலுள்ள குரோம் கணினிகளில் இதுதான் காஸ்ட்லி. கீபோர்டை தனியாக கழற்றி டேப்லட்டாக பயன்படுத்தும் நவீன வசதி கொண்டது. குரோம் ஓஎஸ் பயன்படுத்த பவராக இருந்தாலும் கணினியின் 4 ஜிபி ராம், 32 ஜிபி நினைவக வசதி போதாது. ட்ராக்பேடு துல்லியமாக உள்ளது. கீபோர்டை மானிட்டருடன் காந்தம் இணைத்துள்ளது என்பதால் எளிதாக பிரித்து இணைக்கலாம். திரை 12.3 இன்ச். 10 மணிநேரம் தாங்கும் பேட்டரி. எடை 1.4 கி.கி ரூ. 43.557.

V40 ThinQ

எல்ஜியின் புதிய போன் V40  ஐந்து கேமிராக்களுடன் விரைவில் சந்தைக்கு வரவிருக்கிறது. 6.4 இன்ச் திரையுடன் ஸ்னாப்டிராகன் 845 புரோசசர், முன்புறம் இரண்டு கேமிரா, பின்புறம் மூன்று கேமராக்களுடன் வரும் கேமராவுக்கு எல்ஜி ஏற்கனவே விளம்பரம் வெளியிட்டு விட்டது.

Amazon’s Fire TV Cube

டிவிக்கு 4K தரத்தில் வீடியோக்களை பார்க்க நல்ல செட்டாப் பாக்ஸ் தேடினீர்கள் என்றால் அமேஸான் உதவும். இதனுடன் அலெக்ஸாவை இணைத்தால் குரல் மூலம் பொழுதுபோக்கையும் கட்டுப்படுத்தலாம். ரூ. 5,733   


  


பிரபலமான இடுகைகள்