இயற்கை பொருளாதாரத்திற்கு பரிசு!


பொருளாதார நோபல்!



Image result for economic nobel 2018

உலகம் சூழலுக்குகந்த வளர்ச்சியை பெறுவதற்கான திட்டங்களை முன்வைத்த பொருளாதார அறிஞர்கள் வில்லியம் டி நார்டாஸ்(யேல் பல்கலைக்கழகம்), பால் எம் ரோமர்(நியூயார்க் பல்கலைக்கழகம்) ஆகியோருக்கு பொருளாதார நோபல் வழங்கப்பட்டுள்ளது.

சூழலுக்குகந்த உலகை உருவாக்கும் விதமாக கார்பன் வரிகளை உருவாக்கி பசுமை இல்ல வாயுக்களை குறைக்கும் திட்டங்கள் நார்டாஸ் ஸ்பெஷல் தியரி. 1970 ஆம் ஆண்டிலிருந்து வெப்பமயமாதலை அதிகரிக்கும் கரிம எரிபொருட்களை கட்டுப்படுத்தும் வழிகளை ஆய்வு செய்து வந்தவர் பொருளாதார ஆய்வாளர் நார்டாஸ். பரிசு அறிவிக்கப்பட்ட அதேநேரம் ஐ.நாவின் பருவநிலை கமிட்டி நார்டாஸின் கொள்கைகளையொட்டி அறிக்கையொன்றை உருவாக்கியுள்ளது.
சந்தையில் உருவாக்கும் கொள்கைகள் கண்டுபிடிப்புகள் தாக்குப்பிடிப்பதற்கான வழிமுறைகளை ரோமர் ஆராய்ந்துள்ளார். “பொருளாதார நோபல் பரிசுக்கு ஐம்பதாவது ஆண்டில் பரிசுகளை பெற்றுள்ளோம். கார்பன் வெளியீட்டை குறைக்கும் முயற்சியை தொடங்கினால் நிச்சயம் மாற்றமுண்டு” என்கிறார் பொருளாதார ஆய்வாளர் ரோமர்.