பசுமைக்கட்சியின் வியூகம் வெல்லுமா?


பவேரியாவில் பசுமைக்கட்சி!

Image result for green party




பவேரியாவின் பசுமைக்கட்சியைச் சேர்ந்த கேத்தரினா ஸ்சூல்ஸ், நாம் சாதாரணமாக பார்க்கும் அரசியல்வாதி கிடையாது. அண்மையில் நடந்த தேர்தலில் 18% வாக்குகளைப் பெற்று கிறிஸ்டியன் சோசியல் யூனியன் கட்சிக்கு அடுத்த பெரிய கட்சியாகி உள்ளது பசுமைக்கட்சி.





இடதுசாரிக் கட்சியான பசுமைக்கட்சி, அகதிகளுக்கு உதவுவது, எல்லைகளை திறப்பது என தனக்கேயான கொள்கைகளை மக்களிடையே பிரசாரம் செய்து வருகிறது. “பிற கட்சிகள் தினமொரு கொள்கையை பேசுகிறார்கள். எங்களுக்கு லட்சியம் நாங்கள் முன்பே கூறிய விஷயங்களை செயல்படுத்துவதுதான்” என தீர்க்கமாக பேசுகிறார். கேத்தரினா. ஆட்சியைக் காப்பாற்ற ஆளும்கட்சி வலதுசாரிகளுடன் கூட்டணிக்கு முயற்சிக்க, விரக்தியான மக்களின் பார்வை பசுமைக்கட்சி மீது திரும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஐரோப்பாவுக்கு ஆதரவான பசுமைக்கட்சியின் நிலைப்பாடும், இயற்கையைக் காக்கும் செயல்பாடுகளும், உறுப்பினர்கூட்டங்களும் கட்சியை வலுவாக்கி வருகின்றன.  


பிரபலமான இடுகைகள்