கண்ணீர் வருவது எதனால்?
ஆனந்த கண்ணீரே!
கண்கள் சிரமமில்லாமல் நகர்வதற்கு
கண்களில் ஈரப்பதம் தேவை. கண்களின் மேல், கீழ் இமைகளை கன்ஜங்டிவா எனும் மெல்லிய இழை
இணைக்கிறது. 2-10 நொடிகளுக்கு ஒருமுறை கண்களை இமைப்பதன் மூலம் கண்களில் உருவாகும் ஈரப்பதம்
வற்றாமலிருக்கிறது.
கண்ணீர் கண்களுக்கு ஆக்சிஜனையும்
ஊட்டச்சத்துக்களையும் கண்களுக்கு வழங்குகிறது. பாக்டீரியா மற்றும் பல்வேறு தூசு தும்புகளை
வெளியேற்ற கண்ணீர் மட்டுமே ஒரே வழி. கண்ணீர் வெளிவராதபோது கண்ணின் உள் அடுக்குகளில்
காயங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
ஆண்களை விட பெண்கள் அழக்காரணம்,
அவர்களின் உடலிலுள்ள 60 சதவிகித புரோலேக்டின் வேதிப்பொருளே காரணம். நாளமில்லா சுரப்பிகளை
இவைகளே தூண்டி பெண்கள் சிறுசிறு துளிகளாக கண்ணீரை சிந்த வைக்கின்றன.
அதிர்ச்சி, ஆனந்தம், கோபம், துக்கம்
மட்டுமல்ல சிரிப்புக்கும் வரும். வயிற்றிலுள்ள தசைகள், முகதசைகள் இணைந்து நாளமில்லா
அமைப்பை தூண்டுவதால் தொடர்ந்து சிரிக்கும்போது கண்ணீர் வருகிறது.
அழுவது கண்களிலுள்ள பாக்டீரியாக்களை
அழிக்கவும், நம் மனநிலையை மாற்றவும் உதவுகிறது. அழும்போது உடலில் ஆக்சிடோசின், எண்டோர்பின்
வேதிப்பொருட்கள் வெளிவருவதால் நாம் மனம் மற்றும் உடல் வலியிலிருந்து எளிதாக வெளிவர
முடிகிறது.