குளூட்டேன் உடலிற்கு நன்மை செய்யுமா?


குளூட்டேனை தவிர்க்கலாமா?


Image result for gluten free
சுகர் ப்ரீ, குளூட்டேன் இல்லாத, அலர்ஜி பிரச்னைகளை அச்சிடாத உணவுப்பொருட்களை பார்ப்பதே கஷ்டம். உடலில் ஏற்படும் பிரச்னைகள், எடை அதிகரிப்புக்கு குளூட்டன்தான் காரணமா?

புரத குடும்பத்தைச் சேர்ந்த குளூட்டேன் உள்ள கோதுமை, அரிசி, பார்லியை செரிப்பதில் பிரச்னை ஏற்படும்போது வயிற்றுவலி, குடல் எரிச்சல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். ஆஸ்பிரின், அட்வில், குடல் தொற்றுநோய், சர்க்கரை உணவுகள் உள்ளிட்ட பல்வேறு ஆன்டிபயாடிக் மருந்துகளை சாப்பிட்டுள்ளவர்களுக்கு குளூட்டேன் நிச்சயம் வயிற்றில் செரிமான பிரச்னை ஏற்படுத்தும். இதன் விளைவாக வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, விட்டமின் டி பற்றாக்குறை உருவாகி செலியாக் நோய் தோன்றும். நூறில் ஒருவருக்கு தோன்றும் இப்பிரச்னையை ரத்தசோதனை மூலம் கண்டறியலாம். குளூட்டேன் ப்ரீ டயட்டை  தேர்ந்தெடுப்பது பின்னாளில் நிரீழிவை ஏற்படுத்தும் காரணியாக மாறும் என எச்சரிக்கிறது அமெரிக்க இதயச்சங்கம்(2017).
 
பெரும்பாலான மக்களுக்கு குளூட்டேன் ப்ரீ என்ற பெயரில் விற்கும் உணவுப்பொருட்கள் எந்த ஆரோக்கியத்தையும் வழங்காது என்பதே உண்மை.





பிரபலமான இடுகைகள்