பத்திரிக்கையாளரை கொன்ற சவுதி அரேபியா!


பத்திரிகையாளர் கொல்லப்பட்டாரா?



Image result for khashoggi


கடந்த வாரம் துருக்கியிலுள்ள சவுதி அரேபியா தூதரகத்திற்கு சென்ற பத்திரிகையாளர் ஜமால் காஷோகி, கொல்லப்பட்டிருக்கலாம் என வதந்திகள் கிளம்பியுள்ளன. சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் இச்செய்தியை தீர்க்கமாக மறுத்துள்ளார்.

விசாரணையில் விபரீதம் நடந்து காஷோகி இறந்துவிட்டார் என்று செய்திகள் கசிந்தாலும் துருக்கியும் இதனை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்பதோடு சவுதி அரசுக்கும் இதன் மூலம் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏனெனில் பத்திரிகையாளர் காணாமல் போய் ஒருவாரத்திற்கு மேலாகிறது. “காஷோகி உயிரோடு இருப்பார் என்ற நம்பிக்கை தேய்ந்துவருகிறது” என கலங்குகிறார் அமெரிக்காவிலுள்ள காஷோகியின் துணைவியான ஹேட்டிஸ் சென்கிஷ். துருக்கி, அமெரிக்கா என இருநாடுகளும் சவுதியின் நட்பு வட்டத்தில் உள்ளதால் இதில் அடக்கி வாசிக்கின்றன. காஷோகி காணாமல் போன தினத்தில் சவுதியிலிருந்து பதினைந்து பாதுகாப்புத்துறை ஏஜென்டுகள் துருக்கியிலுள்ள சவுதி தூதரகத்திற்கு வந்துள்ளது காஷோகி கொல்லப்பட்டிருக்கலாம் என்ற யூகத்திற்கு வலு சேர்க்கிறது.

காஷோகி கொல்லப்பட்ட விவகாரத்தில் சல்மானுக்கு எந்த குற்றவுணர்வும் கிடையாது என்பதை அவர் கலந்துகொண்ட வர்த்த மாநாட்டில் உலகமே அறிந்தது. விசாரணை நடத்தவேண்டுமென அமெரிக்க அதிபரே நெருக்கடி முற்ற கூறிக்கொண்டிருக்கும் போது, செல்பிக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார் சல்மான்.

அமெரிக்கா, துருக்கி இதில் பெரியளவு தலையிடாதற்கு காரணம், சவுதியிடம் கொண்டுள்ள வர்த்தக உறவுகள்தான் காரணம். 

  




பிரபலமான இடுகைகள்