ஹவாயை பிரதிநிதித்துவப்படுத்திய முதல் நாடாளுமன்ற உறுப்பினர்!
சக்தி!
Mazie Hirono
”அமெரிக்க
சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய என்னுடைய பயணம், கல்லூரியில் வியட்நாமிய போருக்கு
எதிராக ஒன்றுதிரண்டபோது தொடங்கியது” என
புத்துணர்வாக பேசும் மேசி ஹிரோனோ அமெரிக்காவின் முதல் ஆசிய –அமெரிக்க சட்டசபை உறுப்பினர்.
1947
ஆம் ஆண்டு நவ.3 அன்று ஜப்பானின் புகுஷிமாவில் பிறந்த மேஷி ஹிரோனா, தன் எட்டு வயதில்
தாயுடன் அமெரிக்காவுக்கு வந்து அந்நாட்டு குடிமகளானார். 1994-2013 வரை ஹவாய் சட்டமன்ற
உறுப்பினர், கவர்னர், அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர் என பல்வேறு பதவிகளை வகித்த மேசி,
ஜனநாயக கட்சி உறுப்பினர். “ஜனநாயகத்தின் பன்முகத்தன்மை காக்கப்படவேண்டும்” எனும் மேசி,
ஹவாயிலுள்ள பொதுப்பள்ளி, பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றார்.
“அமெரிக்க மாநிலமான ஹவாய்
மக்களின் பிரதிநிதியாக மக்கள் முன் நிற்கும் தைரியத்தை என் அம்மாவிடமிருந்து பெற்றேன்.
பொருளாதார பலமில்லாது அமெரிக்காவில் நுழைந்து என்னை வளர்த்த அவரிடமிருந்து கற்றது ஏராளம்”
எனும் மேசி, ராணுவத்தில் சூழலுக்கு இசைவான பொருட்கள், புதுப்பிக்கும் ஆற்றல்கள் ஆகியவற்றை
பிரசாரம் செய்து வலியுறுத்தி பேசியுள்ளார். “நாம் யாருக்காக எதற்கு போரிடுகிறோம் என்பதை
நான் உணர்ந்தேயிருக்கிறேன்” என்கிறார் மேசி ஹிரோனோ.