டிஜிட்டல் நூலகம் வேண்டுமா?


டெக் புதுசு!


Image result for Kobo Clara HD Ebook


Anker Soundcore Spirit Pro

சிலிகான், பிளாஸ்டிக் பெரும்பாகம் உள்ளதால் எடை குறைவு. சைஸ் பெரியது போல தோன்றினாலும் காந்தத்தின் உதவியால் கீழே விழாமல் எளிதாக இணைகிறது. 10 மணிநேர பேட்டரி சக்தியுடன் கச்சிதமான மூன்று பட்டன் லேஅவுட்டால் ஒலி, அழைப்பு ஆகியவற்றை எளிதாக செய்யலாம். நல்ல ஒலியில் வியர்வை எதிர்க்கும் டெக் நுட்பத்துடன் கொடுக்கும் காசுக்கு மதிப்பான பொருள். ரூ.3,701

Kobo Clara HD Ebook 


14 ஃபைல் பார்மெட், 11 ஃபாண்டுகள், 40 ஃபாண்ட் ஸ்டைல்கள் என கோபோ கிளாரா ஈர்க்கிறது. வைஃபையுடன் இணைத்தால் 8 ஜிபி மெமரி மூலம் 6 ஆயிரம் நூல்களை தரவிறக்கி சேமித்து வாசிக்கலாம். நுட்பமான தொடுதிரை, நூல் தகவல்களை துல்லியமாக காட்டுவது என ஈர்த்தாலும் 8 ஜிபியை விரிவாக்க முடியாதது மைனஸ். மற்றபடி தீவிர வாசகர்களுக்கு ஏற்ற டிஜிட்டல் நூலகம் இது. ரூ. 9,550