கஹானியன் லலிதாம்பிகா!


பாதுகாப்பற்ற மாத்திரைகளுக்கு தடை! –


Image result for pills


அண்மையில் இந்திய அரசு, பாதுகாப்பற்ற மாத்திரைகள் என அடையாளம் காணப்பட்ட 328 மாத்திரைகளுக்கு (FDC) தடை விதித்துள்ளது(தயாரிக்க, விநியோகிக்க, விற்க). இதில் புகழ்பெற்ற தலைவலி, காய்ச்சல் மாத்திரையான சாரிடானும் அடக்கம்.
2016 ஆம் ஆண்டிலிருந்து கூட்டு மருந்துகளை உள்ளடக்கிய FDC மாத்திரைகளை தடை செய்வதற்கான முயற்சிகளை சுகாதார அமைச்சகம் மேற்கொண்டிருந்தது. இத்தடையால் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருந்துநிறுவனங்கள் பாதிக்கப்படும். அமுலாகிவிட்ட இத்தடையால் குளுகோநார்ம், டாக்சிம் AZ, லூபிடைசல் உள்ளிட்ட மருந்துகளை இனி மருந்தகங்களில் விற்க முடியாது.

உடனே டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகிய மருந்து நிறுவனங்களின் வாதங்களை ஏற்று சாரிடான், பிரிடான், டர்ட், ஏஸ் பிராக்‌ஸிவோன் ஆகிய மருந்துகளை விற்க தடையில்லை என ஆர்.எஃப். நாரிமன், இந்து மல்ஹோத்ரா உள்ளிட்ட நீதிபதிகள் உத்தரவு வழங்கியுள்ளனர். ரூ.1.2 லட்சம் கோடி உள்நாட்டு மருந்து வணிகமுள்ள இந்தியாவில் FDC மருந்துகளின் விற்பனை 50 சதவிகிதமாகும்.

2
Related image




கஹானியன் லலிதாம்பிகா!

இஸ்‌ரோவில் 30 ஆண்டுகளாக பணியாற்றிய கேரளாவைச் சேர்ந்த வி.ஆர். லலிதாம்பிகா, 2022 ஆம் ஆண்டில் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் கஹானியான் திட்டத்திற்கான இயக்குநராக பொறுப்பேற்றுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த எஞ்சினியர் லலிதாம்பிகா, 104 செயற்கைக்கோள்களையும் 100 விண்வெளித் திட்டங்களையும் ஏவுவதிலும் உருவாக்கியதிலும் உதவியுள்ளார். வீட்டிலேயே கணிதவியலாளரான லலிதாம்பிகாவின் தாத்தா உருவாக்கிய தொலைநோக்கி பால்யத்தில் இவரின் அறிவியல் ஆர்வத்தை வளர்த்தது. தும்பா ராக்கெட் ஏவுதளத்தின் அருகிலேயே வீடு இருந்ததும் பொறியாளரான அப்பா, ஆராய்ச்சியாளரான தாத்தா ஆகியோரும் அறிவியல் ஆர்வத்திற்கு துணைநிற்க முதுகலை பொறியியல் படிப்பை திருவனந்தபுரத்திலேயே நிறைவுசெய்தார் லலிதாம்பிகா.

திருமணமாகி சில ஆண்டுகளுக்குப் பிறகு 1988 ஆம் ஆண்டு விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பணிக்கு சேர்ந்தார் லலிதாம்பிகா. “நான் பணிக்கு சேர்ந்த சில மாதங்களிலேயே ஏஎஸ்எல்வி, பிஎஸ்எல்வி ராக்கெட் சோதனை தோல்வியை சந்தித்தேன். பல்வேறு வெற்றி, தோல்வி அனுபவங்களைப் பெற்று தற்போது கஹானியான் திட்ட இயக்குநராக இஸ்‌ரோ தலைவரின் கீழ் பணியாற்றுகிறேன். இத்திட்டப்பணியில் கல்வி மற்றும் தொழில்நிறுவனங்களின் பங்களிப்பு முக்கியமானது.” என்கிறார் லலிதாம்பிகா.    



3


மரண டான்ஸ்! 
உத்தரப்பிரதேச அமைச்சர் அனுபமா ஜெய்ஸ்வால் விநாயகர் சதுர்த்திக்கு போட்ட உற்சாக டான்ஸால், அறுபதிற்கும் மேலான குழந்தைகள் இறந்துபோயுள்ளனர்.

உ.பியைச்சேர்ந்த பாரைச் தொகுதியில் கடந்த ஒரு மாதமாக மர்மகாய்ச்சல் பரவி குழந்தைகளும், சிறுவர்களும் சிகிச்சை பெற்று வந்தனர். காய்ச்சல் தொற்றும் வேகம் அதிகரிப்பதை அதிகாரிகள் கல்வி மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அனுபமாவிடம் தெரிவித்தும் அவர் கண்டுகொள்ளவில்லை. தொற்றுநோயாக பரவிய காய்ச்சல் அருகிலுள்ள பஸ்தி, கோண்டா, ஸ்ரவஸ்தி ஆகிய மாவட்டங்களிலும் பரவி மிரட்டியது. பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்க அமைச்சர் அனுபமா எடுத்த ஆக்‌ஷன், விநாயகர் சிலைக்கு முன் பஜன்களை குஷியுடன் பாடி ஆடியதுதான். “வைரஸ் காய்ச்சலுக்கு மொத்தம் 61 குழந்தைகள் பலியாகியுள்ளனர். ஒன்பது குழந்தைகள் நிமோனியா பாதிப்பிலும், பனிரெண்டு பேர் மூளைக்காய்ச்சல் பாதிப்பிலும் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்” என தகவல் தெரிவிக்கிறார் மருத்துவமனை சூப்பரிடெண்ட் ஓ.பி.பாண்டே. ஓட்டு போட்டதுக்கு பிரயோஜனம் இதுதான்!


பிரபலமான இடுகைகள்