நகம் கடிக்கலாமா?
ஏன்?எதற்கு?எப்படி?- Mr.ரோனி
நகம் கடிக்கும் பழக்கம் ஆபத்தானதா?
பஸ், ட்ரெயினுக்காக காத்திருக்கும்போது
சிலர் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் கால் மாற்றி நின்று சகஜமாக நகம்கடிக்கும் புறத்தில்
நன்று. அகத்தில் ஆபத்து! பயப்படாதீர்கள். உலகில் 30% பேருக்கு நகம் கடிக்கும் பழக்கம்
உள்ளது. ‘மக்கள் நகம் கடிப்பதற்கு மன அழுத்தம்
காரணம் என பொதுவாக கூறினாலும் சலிப்பு, தனிமை ஆகியவற்றையும் சமாளிக்க நகம் கடிக்கின்றனர்’
என்கிறார் மான்ட்ரியல் மனநல பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் ஓ கானர். சூழலை சமாளிக்க
உதவும் நகம் கடிக்கும் பழக்கம் பர்ஃபெக்ட் மனிதர்களுக்கு ஆஸ்தான அடையாளம். அதேசமயம்
நகம் கடித்தல் தீவிரமானால் அதன் பெயர் onychophagia. நோ டவுட், உளவியலாளரிடம் கவுன்சிலிங் அவசியம் தேவை.