மனைவியை சுமந்தால் சாம்பியன்!
பிட்ஸ்!
மனைவியை சுமந்தால் சாம்பியன்!
வட அமெரிக்காவின் மெய்ன் மாநிலத்திலுள்ள
சன்டே ரிவர் ரிசார்ட்டில் மனைவியை கணவர் சுமந்து ஓடும் போட்டி நடைபெற்றது. 35 ஜோடிகள்
பங்கேற்ற இப்போட்டியில் ஜெஸ்ஸி வால்- கிறிஸ்டின் அர்செனால்ட் ஜோடி காதலுடன் போட்டியில்
முந்தி 12 பெட்டி பீர் டின்களையும் பணம் பரிசையும் வென்றது. கூடுதலாக, ஃபின்லாந்து
டூர் செல்லவும் சான்ஸ் கிடைத்துள்ளது.
தங்கத்தின் சிக்கன்!
அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள
பாப்பேயெஸ் உணவகம் அண்மையில் தனது 3 ஆயிரமாவது கிளையைத் கிராண்ட்தெருவில் தொடங்கியது.
அதன் ஸ்பெஷலாக 24 கேரட் சொக்கத்தங்க சிக்கனை பரிமாறி வாடிக்கையாளர்களை பிரமிக்க வைத்துள்ளது.
கதவைத் தடுத்த விண்கல்!
அமெரிக்காவின் மிச்சிகனைச் சேர்ந்தவர்
கதவுத்தடுப்பாக பயன்படுத்திவந்த கல், அரிய விண்கல்; இதுவரை பெறப்பட்ட கற்களிலேயே பெரியது(10
கி.கி) என வானியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். 1988 ஆம் ஆண்டிலிருந்து மிச்சிகன் மனிதர்,
கதவுக்கு முட்டுக்கொடுத்து வந்த விண்கல்லின் இன்றைய மதிப்பு 1 லட்சம் டாலர்கள்(ரூ.73,86,000).
ஸ்மித்சோனியன் அருங்காட்சியகம் இக்கல்லை விலைக்கு வாங்க முயற்சித்து வருகிறது.
லங்கூர் டிரைவர்!
கர்நாடக பஸ்ஸில் லங்கூர் இன குரங்கு
ஒன்று டிரைவராக வேலை செய்த வீடியோ இணையத்தில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. கர்நாடக
பஸ் டிரைவர், லங்கூர் குரங்கு பஸ்ஸின் ஸ்டீரியங்கில் அமர்ந்திருக்க தலையை தடவிக்கொடுத்து
ஓட்டச்சொல்லும் திக் திக் வீடியோ வெளியாக விதிமுறைகளை மீறிய டிரைவர் கர்நாடக அரசு போக்குவரத்துறையால்
சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.