அங்கீகாரம் கொடுக்காததால் திருடன்!
அங்கீகார கொள்ளை!
கொள்ளையர்களிடமிருந்து பணத்தை
காப்பாற்றிய பணியாளருக்கு வெறும் டீஷர்ட்டை பரிசாக கொடுத்தால் என்னாகும்? யெஸ் பணம்
அபேஸ்தான்.
தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய
தான்சிங் வங்கிக்கு பணத்தை டெபாசிட் செய்யப்போகும்போது கொள்ளையர்களால் தாக்கப்பட்டார்.
உயிரைக்கொடுத்து ரூ.80 லட்சத்தை காப்பாற்றியவருக்கு டீஷர்ட்டை பரிசளித்து சைலண்டானார்
தான்சிங்கின் முதலாளி. மூன்று பெண்கள் திருமணத்திற்கு காத்திருக்க, முதலாளி பணப்பரிசு
கொடுப்பார் என நினைத்த தான்சிங் விரக்தியாகி வஞ்சகமாக பணத்தை லபக்க உடனே பிளான் போட்டார்.
கஸ்டமரிடம் பணத்தைப் பெற தான்சிங்க்கை முதலாளி நம்பி அனுப்ப, பணத்தை தன் பாக்கெட்டில்
போட்ட தான்சிங் உடனே நண்பர் யாகூப்பின் உதவியை நாடினார். பைக்கை டெல்லியில் பார்க்
செய்துவிட்டு கார் ஏறி நைனிடாலுக்கு வந்து தான்சிங் தலைமறைவானார். தான்சிங்கின் பைக்கை
எடைக்கு போட்டு எவிடென்ஸை அழிக்க டெல்லிக்கு வந்த நண்பர் யாகூப், க்ரைம் பிராஞ்ச் போலீசில்
அம்மாஞ்சியாய் மாட்டிக்கொண்டார். பிளானுக்கு கமிஷனாக வாங்கிய மூன்று லட்சம் வங்கிக்கணக்கில்
வகையாக சிக்க யாகூப் க்ரைம் கதையை மெல்ல சொல்லிவருகிறார்.
2
புத்த காமெடியன்!
வாழ்வின் துன்பத்தை மறக்க சிரிப்பும்
மருந்துதான் என காமெடியை கையில் எடுத்துள்ளார் பூட்டானைச் சேர்ந்த புத்த துறவியான புர்பா
தின்லே.
புத்ததுறவியாக பயிற்சியெடுத்து
பின்னர் காமெடி நடிகராகியுள்ள புர்பா, முதல்படமான லென்சா தொடங்கி இதுவரை 58 படங்களில்
காமெடியில் கலக்கியுள்ளார். சிறுவயதிலிருந்து சேட்டை நாயகனாக வலம்வந்த புர்பாவை கட்டுப்படுத்த
பெற்றோர் முதல் ஆசிரியர் வரை திணறியுள்ளனர். தன் முப்பதாவது வயதில் இசை, நடனத்திற்கான
ராயல் அகாடமியில் சேரும்வரை வாழ்க்கையில் அடுத்த என்ன என்ற கேள்விக்கு விடையின்றி தவித்தவர்,
சில மாதங்களிலேயே காமெடியை கையில் எடுத்து பூட்டான் சினிமாக்களில் நடிக்கத் தொடங்கினார்.
பாலிவுட் நடிகர்களான கோவிந்தா, ஜானி லீவர், காதர்கான் ஆகியோரின் காமெடிதான் புர்பாவுக்கு
இன்ஸ்பிரேஷன். “என் ஆசிரியர்கள் காமெடியனாகும் என் ஆசையை ஊக்கப்படுத்தவில்லை. துறவி(அ)
நடிகராக இருந்தாலும் மகிழ்ச்சியை மக்களிடம் பரப்புவதே என்னுடைய பணி” என சிரிக்கிறார்
காமெடி சூப்பர்ஸ்டார் புர்பா தின்லே.
சுகாதார ஃபில்டர்! –
குடிநீரிலுள்ள ஆர்சனிக் நச்சை
நீக்கும் மலிவுவிலை ஃபில்டரை அசாம் பல்கலைக்கழக மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட்,
மணிப்பூர், அசாம், உ.பி ஆகிய மாநிலங்களிலுள்ள குடிநீரில் ஆர்சனிக் நச்சு பாதிப்பு உண்டு.
மாசுபட்ட நீரை சுத்திகரிக்க அசாம் தேஸ்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் அர்சைரன் நைலோஜன்
எனும் ஃபில்டரை ரூ.500 விலையில் தயாரித்து சாதித்துள்ளனர். அசாமிலுள்ள மஸ்காவோன் கிராமத்திலுள்ள
400 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ஆறு பெரிய ஃபில்டர்களை பல்கலைக்கழக மாணவர்கள்
தயாரித்து பொருத்தியுள்ளனர்.
ஒரு பில்லியன் லிட்டர் நீரில்
10ppb அளவு ஆர்சனிக் நச்சு உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்காது என உலகசுகாதார நிறுவனம்
அறிவித்துள்ளது. மஸ்காவோவின் கிராமத்தின் நீரிலுள்ள நச்சு அளவு 990ppb யாக உள்ளது.
2005 ஆம் ஆண்டு தேஸ்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் தொடங்கிய ஃபில்டர் ஆராய்ச்சியை பேராசிரியர்
ராபின்குமார் தத்தா வழிநடத்தி ஆர்சனிக் நச்சின் அளவை 2ppb யாக குறைத்துள்ளனர். ரூ.
500 செலவழித்தால் 10 ஆயிரம் லிட்டர் நீரை தூய்மையாக்கி அருந்தலாம். பிராக்டிக்கல் ப்ராஜெக்ட்!