இளைஞர்களை புரிந்துகொள்வது ஈஸி!



 நேர்காணல்


Image result for youth life style



இளைஞர்களை புரிந்துகொள்வது ஈஸி!

பேராசிரியர் சாராஜேன் பிளாக்மோர்.

தமிழில்: ச.அன்பரசு

நம்மில் பலருக்கும் இளைஞர்களை புரிந்துகொள்ள முடியாத அங்கலாய்ப்பு உள்ளது. ஏன்?

இளைஞர்களின் மூளை தொடர்ச்சியாக வளர்ந்துவருகிறது. மூளையை எம்ஆர்ஐ ஸ்கேன் வழியாக ஆராய்ச்சி செய்யும் வரை மூளை குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு வளர்வதில்லை என பல ஆராய்ச்சியாளர்கள் கூறினர். ஆனால் மூளை இருபது வயதுக்கு பிறகும் வளர்ச்சியடைவதே உண்மை.

குழந்தைகளின் மூளை –- இளைஞர்களின் மூளை என்ன வேறுபாடு?

குழந்தைகளின் மூளையிலிருந்து இளைஞர்களின் மூளை உறுதியான பல்வேறு மாற்றங்களை(வடிவம், ஆற்றல் உட்பட) காண்கிறது. இவை ஒரே நாளில் மாற்றங்களைப் பெறுவதில்லை.
என்ன மாற்றங்கள் என கூறுங்கள்.

வெள்ளை, கருப்பு என இருபகுதிகளால் மூளை உருவாகியுள்ளது என உதாரணமாக கொள்வோம். மூளையின் நியூரான்களை இணைப்பதற்கு சினாப்செஸ் என்று பெயர். வெள்ளை நிறப்பகுதியில் உள்ள பல்வேறு இழைகள் மூலம் பிறருடன் தொடர்புகொள்வதற்கான விஷயங்கள் நடக்கின்றன. டீன் ஏஜ் பருவத்தில் வெள்ளைநிறப்பகுதி அதிவேகமாக வளர்ச்சிபெறுகிறது. 

அதேநேரம் கறுப்புநிற பகுதி வெள்ளைநிற பகுதியாகவும் மாற்றமடைந்து மூளையின் அளவு குறைகிறது. மூளையின் வளர்ச்சியில் இதில் சூழலுக்கு முக்கிய இடமுள்ளது.
மூளையின் வளர்ச்சியை தீர்மானிப்பதில் சூழ்நிலைகள் முக்கியபங்கினை வகிக்கின்றதா? அல்லது பிற காரணிகள் உண்டா?

சூழல் காரணிகள் முக்கியமான பங்களிப்பை மூளையின் வளர்ச்சியில் ஏற்படுத்துகின்றன என்பது எங்களது ஆராய்ச்சி முடிவு. குடும்பம், கல்வி, சமூகம், ஊட்டச்சத்தான உணவு, உடற்பயிற்சி, மது உள்ளிட்டவற்றுக்கும் இதில் பங்குண்டு. இவையின்றி பிற காரணிகளும் காரணமாக இருக்கக்கூடும்.
இளைஞர்களின் மாறுபட்ட நடத்தைகளுக்கும் இவைதான் காரணமா?

அப்படியிருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. இளைஞர்களின் ஆபத்தின் விளைவுகளை அறியாத முயற்சிகள், சுயமதிப்பு, தங்களின் விருப்பங்களை தன்னிச்சையாக செயல்படுத்த முனைவது, பெற்றோரை விலக்கி நண்பர்களை தேடுவது என செயல்பாடுகள் இருக்கும். இம்மாற்றங்கள் வளரிளம் வருவத்திலுள்ள விலங்குகளுக்கும் உண்டு.

உங்களுடைய நூலில் இளைஞர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளீர்கள். அதற்கு காரணம், சமூகம் அவர்களை மோசமானவர்களாக காட்சிபடுத்துவதுதான் காரணமா?
இணையத்தில் பெண்களை இழிவுபடுத்துவது, இனவெறுப்பு பதிவுகள், பரிகாச வீடியோக்கள் என இளைஞர்கள் சமூக வலைதளத்தில் செயல்படுவது உண்மைதான். அந்த ஒரே காரணத்தை முன்வைத்து புதிய தலைமுறை இளைஞர்களை மோசமானவர்கள் என முத்திரை குத்துவது அவர்களை அணுகுவதற்கான சரியான அணுகுமுறை அல்ல.

இளைஞர்களின் நடத்தை குறித்த நூலை எழுதுவதற்கு என்ன காரணம்?

இது நாம் அனைவரும் வாசிப்பதற்கான நூல்தான். அனைத்து இளைஞர்களும் இந்த நூலைப் படித்து தங்களின் மூளைச்செயல்படுவதை தெரிந்துகொள்வார்கள் என்று நான் நம்பவில்லை. பள்ளியில் கூட அடிப்படையான விஷயங்கள் தவிர்த்து மூளை குறித்து ஆழமாக கற்றுத்தரப்படுவதில்லை என்ற குறையைப் போக்க நான் எழுதிய நூல் உதவும்.

கல்வியில் என்ன மாறுதல்களை செய்ய விரும்புகிறீர்கள்?

தற்போது இளைஞர்கள் பெரியவர்கள் தூங்கிய பலமணிநேரங்களுக்கு பின்னரே தூங்கச்செல்கிறார்கள். மூளை வளர்ச்சியடையும் பருவத்தில் புரிந்துகொள்ளாமல் அவர்களை இரவில் தூங்க வற்புறுத்துவது தவறானது. பள்ளிகளும் வகுப்புகளை நெகிழ்வான நேரங்களுக்கு மாற்றலாம்.  

இளைஞர்களை அடிமைப்படுத்துவதாக கூறப்படும் டெக்னாலஜி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நான் ஸ்மார்ட்போனை பயன்படுத்தினாலும் என் குழந்தைகள் பயன்படுத்த அனுமதிப்பதில்லை. டெக்னாலஜி இளைஞர்களை அடிமைப்படுத்துகிறது என்பதற்கான ஆய்வுத்தரவுகள் நம்மிடமில்லை.

நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்.காம், கார்டியன்.காம்