போயிங் சாதித்தது எப்படி?


போயிங் 747: 50 ஆண்டுகள்!

Image result for boeing



1968 செப்.30 அன்று முதல் போயிங் விமானம் 747 அமெரிக்காவின் வாஷிங்டனிலுள்ள எவரெட்டில் தயாரானது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களின் பதினாறு மாத உழைப்பில் உருவான ஜம்போ ஜெட் விமானம் இதுவே.
தொண்ணூறுகளில் அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ வாகனமாக மாறியது. டிஸ்னிலேண்டின் சைசிலான விமானம், விமான சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
ராணுவக்கோரிக்கையின் காரணமாகவே ஜம்போ ஜெட் தயாரிப்பில் போயிங் நிறுவனம் ஈடுபட்டது. 1963 ஆம் ஆண்டு அமெரிக்க விமானப்படை, அதிக தொலைவுக்கு சரக்குகளை கொண்டுசெல்லும் வலிமையான விமானம் தேவை என கூறியது. போயிங் 747 சொகுசு விமானத்திற்கான நோக்கத்தை நிறைவேற்றினாலும் அப்போதைய விமானங்கள் விமான கட்டணங்களை குறைக்கவே முயற்சித்து கொண்டிருந்தன. 747 விமானத்தை தனக்கேற்றபடி மாற்றிய நாசா, ராக்கெட்டுகளையும் செயற்கைக்கோள்களையும் கொண்டு செல்லும் வாகனமாக மாற்றி பயன்படுத்தி வருகிறது. கடந்தாண்டே யுஎஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம், 747 விமானத்தை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டது. சரக்குகளை எடுத்துச்செல்லும் விமானமாக இனியும் தன் பயணத்தை போயிங் 747 தொடரக்கூடும்.


பிரபலமான இடுகைகள்