இந்திய - ரஷ்ய ஆயுத ஒப்பந்தம் -பிளஸ் மைனஸ் என்ன?
டீலா? நோ டீலா? –
இந்தியா ரஷ்யா மற்றும் அமெரிக்கா
உள்ளிட்ட இரு நாடுகளுடன் பல்வேறு ஆயுதங்கள் மற்றும் அரசியல் உறவுகளை கொண்டுள்ளது. அமெரிக்கா
‘எங்களோடு இணைந்த நாடுகள் நண்பர்கள் இணையாதவர்கள் பகைவர்கள்’ என மூர்க்கமாக பொருளாதாரத்தடைகளை
முடுக்க இந்தியா- அமெரிக்கா- ரஷ்யா உறவு தீவிரமான சிக்கலாக மாறியுள்ளது.
ரஷ்ய அதிபர் புடின் – மோடி சந்திப்பில்
S-400 வகை வான் தடுப்பு ஆயுதங்கள், காமோவ் ஹெலிகாப்டர்கள், போர்க்கப்பல்கள், ரைஃபிள்கள்
வாங்கவுமான பேச்சுவார்த்தை நடைபெற்றது. ரஷ்யா, இரான் ஆகிய நாடுகளுடன் இந்தியா கொண்டிருக்கும்
வர்த்தக ஒப்பந்தங்கள் காரணமாக அமெரிக்கா CAATSA சட்டம் மூலம் இந்தியா மீது பொருளாதாரத்தடை
விதிக்க வாய்ப்புள்ளது. 2025 ஆம் ஆண்டில் 25 பில்லியன் டாலர்கள் வணிகம் என்ற நோக்கில்
ரஷ்யாவும் இந்தியாவும் முன்னேறி வருகின்றன.
ரஷ்யாவின் சுரங்கம், எண்ணெய் சுத்திகரிப்பு
தொழில்களில் இந்தியா முதலீடு செய்ய புடின் விரும்புகிறார். ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்துகளில்
ரஷ்யா இந்தியாவுடன் இணைந்து திட்டங்களை மேற்கொள்ள எதிர்காலத்தில் வாய்ப்புள்ளது. இந்தியா
70 சதவிகித ஆயுதங்களை ரஷ்யாவிடமிருந்து பெறுவது குறிப்பிடத்தக்கது.