சிந்தி ஷெர்மன் - பத்து லட்சம் வென்ற புரட்சிக் கலைஞர்!
சக்தி!
சிந்தி ஷெர்மன்
அமெரிக்காவில் 1954 ஆம் ஆண்டு
பிறந்த புகழ்பெற்ற புகைப்படக்கலைஞரான சிந்தியா மோரிஸ் ஷெர்மன், கான்செப்சுவல் புகைப்படங்களுக்காக புகழ்பெற்ற ஆளுமை.
புகைப்படக்கலைஞர் பணியைக் கடந்து திரைப்பட இயக்குநர், மாடல் என பணியாற்றுபவர் ஸ்டூடியோவில்
தன்னைத்தானே பல்வேறு கெட்டப்புகளில் புகைப்படங்களாக எடுத்து தள்ளி பிரபலமானார்.
கருப்பு-வெள்ளையில் திரைப்பட நடிகைகளின்
பல்வேறு புகைப்படங்களை உள்ளடக்கிய உருவாக்கி
கலைப்படைப்பு இவருக்கு பெரும் புகழ்பெற்று தந்தது. 1972 ஆம் ஆண்டு பஃப்பாலோ
மாநில கல்லூரியில் விசுவல் ஆர்ட்ஸ் பாடப்பிரிவில் சேர்ந்தவர், அதில் கற்றுக்கொள்ள ஏதுமில்லை
என்று சொல்லி புகைப்படப்பிரிவுக்கு மாறினார்.
“எழுபதுகளில் புகைப்படங்களை எடுக்க
தொடங்கி விற்கும்போது ஆண்களுக்கும் பெண்களுக்கும் விற்பனையில் பெரிய இடைவெளி இருந்ததை
அனுபவபூர்வமாக உணர்ந்தேன். என்னால் வெளிப்படையாக பேசமுடியாதவற்றை என் படைப்புகள் பேசுகின்றன”
என அதிரடியாக பேசும் பெண்கலைஞர் சிந்தியாவின் புகைப்பட படைப்பு முதன்முதலில் ரூ.10
லட்ச ரூபாய்க்கு விலைபோய் வரலாற்று சாதனை படைத்தது.