காந்தி இந்தியர்களை கோபப்படுத்தியது உண்மை!


முத்தாரம் Mini




Image result for gandhi

காந்தி அறிமுகமானது எப்படி?

காந்தியை முதன்முதலாக குஜராத்தி மொழி இலக்கியம் வழியாகவே அறிந்தேன். காந்தி கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என அவரைச் சுற்றியிருந்தவர்கள் எழுதியவை என்னை ஈர்த்தன. காந்தியின் தொகுப்பு நூல்களை அவரறிந்த குஜராத்தி, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளின் வழியே படித்து மகிழ்ந்தேன். காந்தியைப் பற்றி ஆராயும் ஆராய்ச்சியாளர்கள் அவர்களைப் பற்றி படிப்பது அவசியம்.

வலதுசாரிகள் காந்தியை சிறுமைப்படுத்த முயல்வது ஏன்?

சிறுமையாக அதனை நான் கருதவில்லை. காந்தியின் சமூக, தத்துவார்த்த கலாசார பார்வை வலதுசாரிகளுக்கு மட்டுமல்ல அவரது தொண்டர்களுக்கே பதற்றத்தை சமநிலையின்மையை ஏற்படுத்தியது. காந்தியின்றி இந்தியா சிறப்பாக செயல்பட்டிருக்க முடியும் என்ற கருத்துக்கள் இவ்வெண்ணத்தின் வெளிப்பாடுதான். இதன் தீவிரம்தான் 70 வயதான காந்தியை துப்பாக்கியால் சுட்டு கொன்றதும் கூட.

காந்தியின் எழுத்துக்களிலுள்ள தனித்த அடையாளம் என்ன?

வெளிப்படைத்தன்மை. காந்தி தான் எழுதிய நூல்களில் தன் உள்ளார்ந்த ஆசைகளையும், அவை நிறைவேறாமல் தோற்றுப்போனதையும் நேர்மையாக எழுதியுள்ளார்.

-திரிதிப் சுக்ருத், எழுத்தாளர், காந்திய ஆய்வாளர்.