Gay ரத்தமா? நோ - அரசின் பகீர் ரத்ததான முடிவு!
Gay ரத்தம் வேண்டாம்! –
சாதி, மதம் மாறினாலும் ரத்தம்
மாறாது என்பது உண்மைதான். ரத்தமும் வேறுபடும் என முடிவு செய்த இந்திய அரசு எல்ஜிபிடியினரை
ரத்த தானம் தருவதிலிருந்து நீக்கியுள்ளது.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் ரத்ததான
விதிகளை மாற்றிய இந்திய ரத்த தான கழகம்(NBTC), எல்ஜிபிடியினரிடம் ரத்தம் பெறக்கூடாது
என நாடெங்குமுள்ள ரத்தவங்கிகளை வலியுறுத்தியுள்ளது. ஹெச்ஐவி மற்றும் மஞ்சள்காமாலை கிருமிகள்
பரவும் அபாயம்தான் காரணம்.
புற்றுநோய், அலர்ஜி மற்றும் நீண்டநாட்கள் நோய்களால் அவதிப்பட்டவர்களிடமும்
ரத்தம் பெறக்கூடாது என்ற விதிகள் முன்பே உள்ளன.
குறிப்பிட்ட நோய்களின் லிஸ்ட்டில்
இனி செக்ஸ் வாழ்க்கை குறித்தும் கேள்வி கேட்டு பின்னரே ரத்தம் பெறும்படி விதிகள் கறாராகியுள்ளன.
“நீதிமன்ற தீர்ப்புக்கும் ரத்ததான விதிகளுக்கும் தொடர்பில்லை. தொற்றுநோய்களைத் தடுக்கவே
இவ்விதி” என்கிறார் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்க மருத்துவர் சோபினி ராஜன். “மக்களிடம்
எப்படி பொது இடத்தில் செக்ஸ் சம்பந்தமாக கேள்வி கேட்பீர்கள்?” என லாஜிக் கேள்வி கேட்கிறார்
ஹம்சஃபர் இயக்கத்தைச் சேர்ந்த அசோக் கவி. ஓரினச்சேர்க்கையாளர்களை ரத்த தானம் தருவதிலிருந்து
தடைவிதிக்கவும் மருத்துவ வட்டாரங்களில் விவாதம் நடந்துவருகிறது.