தவறான சோதனையால் இழப்பீடு




Image result for nz


தவறுக்கு இழப்பீடு!

நியூசிலாந்து அரசு போதை வழக்கில் தவறுதலாக இடம்பெயர்க்கப்பட்ட 800க்கும் மேற்பட்டோருக்கு பல கோடி ரூபாய் இழப்பீடு தரும் இக்கட்டில் மாட்டியுள்ளது.
“குடியிருப்புகளிலிருந்து மெத்தாம்பீட்டாமைன் வெளியானதற்கு அரசிடம் உறுதியான ஆதாரம் இல்லை.” என்கிறார் அறிவியல் ஆலோசகர் சர் பீட்டர் குளூக்மென். ஜூன் 2013- மே 2018 வரையிலான காலகட்டத்தில் போதைப்பொருள் வெளியீடு உள்ளதாக கூறி 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடியிருப்புகளை அரசு சோதனை செய்தது. சுகாதாரத்துறையின் அறிக்கையை தவறாக பயன்படுத்தி மேற்கொண்ட இச்சோதனைக்கான செலவு, 100 மில்லியன் டாலர்கள். மேலும் மக்களை வேறு இடத்திற்கு வெளியேறக்கூறி தற்போது குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கிய நியூசிலாந்து குடியிருப்புதுறை மக்களிடம் மன்னிப்புக்கோரி, பாதிக்கப்பட்டவர்களுக்கு 1500 பவுண்டுகள்(ரூ.1,42,303) இழப்பீடாக வழங்கவுள்ளது.
முதல்தர போதைப்பொருளாக நியூசிலாந்தில் பட்டியலிடப்பட்டுள்ள மெத்தாம்பீட்டாமைன் உடலைத் தூண்டி அதிவிழிப்புணர்வுடன் செயல்படவைக்க கூடியது. படிக கற்கள், பொடியாக இந்த வேதிப்பொருள் தயாரிக்கப்படுகிறது.    


பிரபலமான இடுகைகள்