அமெரிக்காவின் முதல் பெண் டிவி தொகுப்பாளர்!
சக்தி!
பார்பரா வால்டர்ஸ்!
“காலையில் விரைவாக வேலைக்கு சென்று,
அலுவலக வேலைகளை செய்துவிட்டு லேட்டாக வீடு செல்லுங்கள்” என இளம் பத்திரிகையாளர்களுக்கு
அட்வைஸ் சொல்கிறார் அமெரிக்க ஊடகவியலாளரான பார்பரா வால்டர்ஸ். 1976 ஆம் ஆண்டு ஏபிசி
சேனலில் Today Show நிகழ்ச்சியை எழுதி தொகுத்து வழங்கிய பார்பரா, டிவி சேனல் வரலாற்றில்
முதல் பெண் தொகுப்பாளர். பார்பராவை உலகமே ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தது; விளைவு?
டிஆர்பி உயர, நிகழ்ச்சி சூப்பர் ஹிட்.
“அன்று ஆண்கள்தான் பத்திரிகைத்துறையில்
அதிகம். அதற்கு அஞ்சவில்லை. எனது நிகழ்ச்சி மூலம் பல்லாயிரம் பெண்களும் துணிச்சலைப்
பெற்றிருப்பார்கள்” என புன்சிரிப்புடன் பேசுகிறார் பார்பரா. நிகழ்ச்சி தொகுப்பாளர்
வாய்ப்பு மூலம் அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்ஸன், அன்வர் சதாத்(எகிப்து), மெனசெம்
பெகின்(இஸ்ரேல்), ஃபிடல் காஸ்ட்ரோ(க்யூபா) ஆகியோர் உட்பட பல முக்கிய ஆளுமைகளை பேட்டி
எடுத்து பிரபலமானார். “இஸ்ரேல் பிரதமர் அன்வர், இஸ்ரேல் பிரதமர் பெகின் ஆகியோர் இருவரையும்
ஒன்றாக பேட்டி எடுத்ததும், ஃபிடல் காஸ்ட்ரோவிடம் கேள்விகள் கேட்டதும் மறக்கமுடியாத
அனுபவங்கள்” என்கிறார் 89 வயதான பார்பரா வால்டர்ஸ்.