இத்தாலியை சிதைக்கும் மாஃபியா குழுக்கள்!
வன்முறை வலை!
வன்முறைக்கும் அரசியலுக்குமான
தொடர்பு துப்பாக்கிக்கும் தோட்டாவுக்குமான உறவைப்போல இறுக்கமாக தொட்டுத்தொடர்கிறது.
இத்தாலி மாஃபியாக்கள் இதில் உலகிலேயே முன்னோடி. 2013-15 ஆண்டுகள் அரசியல்வாதிகள் மீது
நடந்த தாக்குதல்கள் எண்ணிகை 1,191 என அவிஸோ பப்ளிகோ தன்னார்வ அமைப்பு நடத்தி ஆய்வில்
தெரிய வந்துள்ளது.
தங்களுக்கு சாதகமாக நடக்காத அரசியல்வாதிகளை வளைக்க
இத்தாலி மாஃபியா கொலைமிரட்டல், கடத்தல், படுகொலைகள் என அத்தனை வழிகளையும் கையாள்கின்றனர்.
1991-2018 காலகட்டத்தில் குற்ற அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்த நகர கவுன்சில்களை
அரசு கலைத்துள்ளது. சிசிலி, கலாபிரியா, கம்பனியா ஆகிய பகுதிகளில் மேயர் தேர்தலின்போது
25 சதவிகிதம் வன்முறை அதிகரிக்கிறது. இவ்வாண்டு தேர்தலில் மட்டும் 132 அரசியல்வாதிகள்
ஆயுத கும்பல்களால் கொல்லப்பட்டுள்ளனர். இத்தாலி மட்டுமல்ல கொலம்பியா, செர்பியா, ஸ்லோவேகியா
நாடுகளிலும் ஆயுதக்குழுக்களின் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இவர்களின் கொலைமிரட்டல்களால்
222 மேயர்களை கொலம்பியாவில் பதவியை ராஜினா செய்துள்ளனர்.