வெள்ளையனே வெளியேறு ஏற்படுத்திய விளைவு என்ன?
வெள்ளையனே வெளியேறு இயக்கம்
1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி மும்பையிலுக்க கோவாலியா மைதானம் வெள்ளை நிறத்தால் நிறைந்து காணப்பட்டது. காங்கிரஸ் மாநாடு. வெள்ளைநிற குல்லாய், வெண்ணிற உடைகள் பெரும்பாலான காங்கிரஸ் தொண்டர்கள் அணிந்து பங்கேற்றனர்.
சர்தார் படேல் தொண்டர்களிடம் பேசிகொண்டிருக்க, நேரு கையில் கோப்புகளுடன் நடந்துகொண்டிருந்தார். கூடவே டாக்டர் ஜாகிர் உசேனும் உடன் வந்தார். நேருவைப் பார்த்ததும் கூட்டம் ஆர்ப்பரித்தது. காந்தி பாயில் வெற்று உடலுடன் ஒருபுறம் சாய்ந்து உட்கார்ந்திருந்தார். தலைவர்கள் காந்தியின் காதில் கூறவேண்டிய விஷயங்களை சொல்லிச்சென்றனர். இப்போது காந்தி பேசவேண்டிய முறை.
"காங்கிரஸ்"இயக்கம், அகிம்சை முறையில் போர்புரிந்து நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுக்கொடுக்கும். வன்முறை முறையிலான வெற்றி சர்வாதிகாரத்தை நாட்டில் ஏற்படுத்தும். இந்தியர்கள் ஒவ்வொருவரும் இறப்பு அல்லது சுதந்திரம் என இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுப்போம் என துணிந்து அகிம்சை போராட்டத்தில் இறங்கினாலொழிய வெள்ளையர்களை விரட்டி அடிமைமுறையை ஒழித்து சுதந்திரக்காற்றை நாம் சுவாசிக்க முடியாது. இப்போதே உறுதிமொழி எடுங்கள் கரோ யா மாரோ"" என காந்தி கூறியதை கூறினாலும் இடையிடையே காந்தி கீ ஜெய் கோஷங்களையும் மக்கள் இடையறாது எழுப்பியபடி இருந்தனர்.
விடுதலை போராட்ட வீரர் அருணா ஆசஃப் அலி இங்குதான் மூவர்ணக்கொடியை முதன்முதலாக பயன்படுத்தினார். அடுத்தநாள் இந்த உரையின் காரணமாக இதில் பங்கேற்ற பலரும் ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டனர்.
நாடெங்கும் ஆங்கிலேயர் பொருட்களை பயன்படுத்தாதீர்கள் என வேண்டுகோள் பேனர்கள் தெருக்களில், முட்டுச்சந்துகளில் சாலை சந்திப்புகளில் வைக்கப்பட்டிருந்தது. அப்போது கிரிப்ஸ் மிஷன் , இந்தியாவிற்கு யூனியன் தகுதியை அளித்து மறைமுகமாக நாட்டின் பாதுகாப்பை ஆங்கிலேயர்களை பார்த்துக்கொள்ளும்படி மசோதாவை தயாரித்திருந்தது. காந்தியின் பூரண சுதந்திரம் பற்றிய அறைகூவல் அதனை ஒழித்துக்கட்டும் என அஞ்சிய ஆங்கிலேயர்கள், மக்கள் கூட்டத்தை கண்ணீர் குண்டு வீசி கலைத்து பயந்து ஓடியவர்களை பிடித்து சிறையில் அடைத்தனர்.
காந்தியின் தலைமையிலான காங்கிரஸ் இதனை தீர்மானகரமாக எதிர்க்க, வெள்ளையனே வெளியேறு இயக்கம் கூர்மையானது. மக்களின் போராட்டமும் தீவிரமானது.
தமிழில்: ச.அன்பரசு
நன்றி: செவ்லின் செபாஸ்டியன், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்.