ஒத்துழையாமை இயக்கத்தில் இளைஞர்கள்!
ஒத்துழையாமை எனும் வேள்வி!
"விடுதலை வீரர்களின் ரத்தமின்றி இந்தியாவின் சுதந்திர கோவில் உருவாகாது" என யங் இந்தியாவில் 1921 ஆம் ஆண்டு ஜூலை 28 அன்று எழுதினார் காந்தி.
பல்லாயிரக்கணக்கானோர் பிரிட்டிஷாரால் தாக்கப்பட்டபோதும் மக்கள் காந்தியின் அகிம்சை கொள்கை காரணமாக அடிவாங்கி சுருண்டனர். இதில் எலும்புகள் உடைந்து நொறுங்கி சரிந்து வாழ்நாள் முழுக்க ஊனமானவர்களும் அநேகர் உண்டு. பூரண சுதந்திரம் என்ற காந்தியின் வார்த்தைக்கான எளிய மனிதர்களின் மகத்தான தியாகம் உடல்தான். உடலையே வேள்வித்தீயில் போட தயாராகிவிட்டனர் மக்கள்.
1920 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 அன்று ஒத்துழையாம இயக்கத்தை காந்தி தொடங்கினார். நாக்பூரில் நடந்த மாநாட்டின் இதனை காங்கிரஸ் கட்சி அங்கீகரித்தது. இதற்கு ஆதரவு தெரிவித்து ரயில்வே ஊழியர்கள் ஸ்ட்ரைக் அறிவித்தனர். கடைகளும் பூட்டப்பட்டன. முதல் வேலைநிறுத்தம் இதுதான் என கூறப்படுகிறது. காதியை பயன்படுத்தி அந்நிய துணிகளை எரித்தவர்கள் அரசு அலுவலகம் உள்ளிட்ட எதனையும் பயன்படுத்தவில்லை. கல்லூரி, பள்ளிகளை புறக்கணித்தனர். நீதிமன்றமும் இதில் உள்ளடக்கம்.
தனக்கு அளிக்கப்பட்ட கெய்சர் இ ஹிந்து பட்டத்தையும் காந்தி துறந்தார். தாகூர் விடுதலைக்காக காந்தி வழியில் நைட்ஹூட் பட்டத்தை விலக்கினார். சி.ஆர். தாஸ் , மோதிலால் நேரு, சைஃப்புதிதீன் கிச்லே ஆகியோர் இவ்வியக்கத்தில் இணைந்து தீவிரமாக செயல்பட்டனர். சுயத்தை தியாகம் செய்வதற்கான பயிற்சி என காந்தி ஒத்துழையாமையை குறிப்பிட்டார்.
1921 ஆம் ஆண்டு காந்தி பள்ளி, கல்லூரி மாணவர்களை ஒத்துழையாமையில் இணைய அறைகூவல் விடுத்தார். அதேசமயம் வன்முறை கூடாது என்பதை தீவிரமாக வலியுறுத்தி கூறினார். 800 க்கும் மேற்பட்ட கல்வி அமைப்புகளிலிருந்து 90 ஆயிரம் மாணவர்கள் இயக்கத்தில் பங்கேற்ற படிப்பை துறந்து வெளியேறினர்.
தமிழில்: ச.அன்பரசு
நன்றி: அஸ்வின் நந்தகுமார்(தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்)