மம்தாவுடன் இணையும் மோடி!
மம்தாவுடன் இணையும் மோடி!
அரசியலில் வேறுபட்டு நின்றாலும் மாநில மக்களுக்கான அரசு திட்டங்களில்
பிரதமர் மோடியின் ஆயுஷ்மான் பாரத்தும், மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் ஸ்வஸ்திய சதியும்
விரைவில் இணையவிருக்கின்றன.
2016 ஆம் ஆண்டு மேற்குவங்க முதல்வர் மம்தாவினால் ஸ்வஸ்திய சதி
மருத்துவ திட்டம் காப்பீடு பெற்றவரின் பெற்றோர்களுக்கும் மனைவிக்கும் விரிவுப்படுத்தப்பட்டது.
தற்போது அமுலாகிய இந்திய அரசின் ஆயுஷ்மான் திட்டத்திற்கு 60:40 என மத்திய அரசும் மாநில
அரசும் நிதியளிக்கவிருக்கின்றன.
மேற்குவங்காளத்தில் மத்திய அரசின் ஆயுஷ்மான் திட்டம் ஸ்வஸ்திய
சதி திட்டத்தின் பெயரிலேயே இணைந்து அமுலாகும் என மம்தா அறிவித்திருக்கிறார். தற்போது
மேற்கு வங்கத்திலுள்ள 47 லட்சம் பேர்களுக்கும் உதவும் திட்டம் இந்திய அரசின் ஆயுஷ்மான்
திட்டத்துடன் இணைந்தபின் 6 கோடிப்பேருக்கு விரிவுபடுத்தப்படுகிறது. காப்பீட்டுத் தொகையும்
ரூ.5 லட்சமாக உயர்கிறது.
ஆயுஷ்மான் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது,
மாநில அரசின் திட்டங்கள் இருக்கும்போது மத்திய அரசின் சுகாதார தேவையில்லாத வெட்டிச்
செலவு என மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.