பயணிகளை காக்குமா ஜீரோ எஃப்ஐஆர்?


ஜீரோ எஃப்ஐஆர்! 



Image result for rpf



ரயில்களில் செல்லும்போது பாலியல் வல்லுறவு, திருட்டு குறித்து புகாரளிக்க இனி அடுத்த ரயில்நிலையம் வரும்வரை காத்திருக்க வேண்டியதில்லை. உடனடியாக புகாரளிக்க ஜீரோ எஃப்ஐஆர் எனும் புதிய வசதியை இந்திய ரயில்வே விரைவில் நாடெங்கும் அமுல்படுத்தவிருக்கிறது.

ஜீரோ எஃப்ஐஆர் ஆப் மூலம் ரயிலில் நடக்கும் திருட்டு, வல்லுறவு குறித்த நிகழ்வுகளை இணையம் அல்லது இணைய 

 வசதியின்றியும் பதிவு செய்தால் ரயில்வே காவல்படை உடனடியாக ஆக்சனில் இறங்கி நீதிபெற்றுத்தரும்.
தற்போது மத்தியப்பிரதேசத்தில் சோதனை முறையில் ஜீரோ எஃப்ஐஆர் வசதி செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதுமட்டுமின்றி டிடிஇயிடம் புகார் படிவங்களை நிரப்பித் தந்தும் குற்றங்களை போலீசுக்கு பதிவு செய்யலாம். குற்றங்கள் எந்த இடத்தில் நிகழ்ந்ததோ அந்த போலீஸ் ஸ்டேஷனில் குற்றவிவரங்கள் பதிவாக விசாரணை தொடங்கும் என்பதை குறிக்கவே ஜீரோ எஃப்ஐஆர் என்று குறிப்பிடுகின்றனர்.


பிரபலமான இடுகைகள்