மொழிபெயர்ப்பு ஏற்படுத்திய பதற்றம்!


மொழிபெயர்ப்பு கோளாறு!


Image result for translation



வனவிலங்குகளுக்கு உணவுப்பொருட்கள் வாங்கும் ஏல விளம்பர குளறுபடியால், கடுமையான விமர்சனங்களை மும்பை மாநகராட்சி எதிர்கொண்டு வருகிறது.

மும்பையில் கடந்த 2015 ஆம் ஆண்டு மாட்டிறைச்சி விற்பதும் உண்பதும் சட்டவிரோதமாக்கப்பட்டு ரூ.10 ஆயிரம் அபராதமும், ஐந்து ஆண்டு சிறைதண்டனை என அறிவிக்கப்பட்டுள்ளது. எருமை இறைச்சி விற்பனை தடையின்றி அனுமதிக்கப்பட்டது.   
மாநகராட்சி பைகுல்லா வனவிலங்கு பூங்காவுக்கு உணவுப்பொருட்களை பெறுவதற்கான ஏல அறிவிப்பை பல்வேறு மொழிகளில் வெளியிட்டது. 

அதில் புலி, கழுதைப்புலிகளுக்கான எருமை இறைச்சி என்பதை மராத்தி, குஜராத்தி, இந்தி, ஆங்கில பத்திரிகைகளில் வெளியிடும்போது, குஜராத்தி, ஆங்கில விளம்பரங்களில் பசு இறைச்சி என மாறி அச்சிட்டு வெளியாக பலரும் அதிர்ச்சியடைந்தனர். விளம்பரம் பற்றி புகார்கள் குவிய, மாநகராட்சி கமிஷனர் அஜய் மேத்தாவுக்கு பிஎம்சி பாஜக உறுப்பினரான மனோஜ் கோடக், விளம்பரத்தை தடை செய்யவும், நேர்ந்த பிழையை ஆராய வற்புறுத்தியும் கடிதம் எழுதியுள்ளார்.      

பிரபலமான இடுகைகள்