கிழக்கு மாநிலங்களுக்கு புதிய டைம்!
வடகிழக்கு மாநிலங்களுக்கு தனி
டைம்! –
இருவகை கடிகார நேரங்களை இந்தியா
பயன்படுத்தலாம் என சிஎஸ்ஐஆர் தேசிய இயற்பியல் ஆய்வக விஞ்ஞானிகள், அறிவியல் மற்றும்
தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
வடகிழக்கு மாநிலங்களில் சூரிய உதயம் முன்னமே வந்துவிடுவதால்
நேரநிலையை மாற்றியமைத்தால் அவர்களுக்கு உதவும் என கடந்தாண்டு மார்ச்சில் பதிவான பொதுநல
மனுவை கௌகாத்தி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. தற்போது ஆய்வாளர்கள் பரிந்துரைத்துள்ள
IST-I(UTC + 5.30 h) and IST-II (UTC + 6.30 h) நேரமுறை
சூரிய உதயம், அஸ்மனத்தை பொறுத்தது, மின்சார சிக்கனம், ரயில்வே விபத்துகளையும் குறைக்கும்
என கூறியுள்ளனர். “வடகிழக்கு மாநிலங்களில் முன்னமே சூரிய உதயம் ஏற்படுவதால் தற்போதைய
நேரமுறைப்படி சில மணிநேரங்களை இழப்பதோடு பனிக்காலங்களில் அதிக மின்சாரம் இழப்பாகிறது.
தீர்ப்பு அரசின் கையில்தான் உள்ளது” என்கிறார் தேசிய இயற்பியல் ஆய்வக தலைவர் டாக்டர்
டி.கே. அஸ்வால்