குழந்தைகளுக்கான உதவி எண்ணுக்கு நேர்ந்த அவலம்!









Image result for child helpline


பூனைச் சகோதரிகள்!






இஸ்‌ரேலின் தாக்குதல்களால் சிதைந்த காசா எல்லைப்புற பகுதியில் ஆதரவின்றி சுற்றித்திரிந்த 35 பூனைகளை மரியம், ரயிஷா, எல்ஹம் அல்பர் ஆகிய மூன்று சகோதரிகள் பாதுகாத்துள்ளனர்.

மூன்று சகோதரிகளும் அல்ஷாதி அகதிகள் முகாமில் சுற்றித்திரிந்த 35 க்கும் மேற்பட்ட பூனைகளை காப்பகம் அமைத்து உணவு, சிகிச்சை கொடுத்து பராமரித்து வருகின்றனர். “பூனைகள் எங்கள் குடும்பத்தின் உறுப்பினர்களாகவே மாறிவிட்டன. பூனைகளை பராமரிப்பதில் எங்களுடைய குடும்பமும் ஆதரவளித்து உதவுகிறது” என்கிறார் மூன்று சகோதரிகளில் இளையவரான மரியம். காசாவிலுள்ள இஸ்லாமிய பல்கலைக்கழக பட்டதாரியான மரியம், ஆசிரியர் வேலைக்கான தேடுதலில் இருந்தார். சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, சாலையைக் கடந்த பூனை காரில் அடிபட்டு குற்றுயிராக விழுந்ததைப் பார்த்து காப்பாற்றினார். அன்றிலிருந்து அப்பகுதியில் காயம்பட்ட ஆதரவற்ற பூனைகளை பாதுகாக்க தொடங்கினார் மரியம். இவரின் ஆர்வத்தை மூத்த சகோதரிகளான ரயிஷா, எல்ஹம் அல்பர் ஆகியோரும் அவர்களின் பிள்ளைகளும் பின்பற்ற பூனைகளின் காப்பகம் மெல்ல உயிர்பெற்றிருக்கிறது. தற்போது பராமரித்து வரும் பூனைகளை ஆர்வமுள்ளவர்களுக்கு தத்து கொடுத்தும் வருகின்றனர்.

விபச்சார ஹெல்ப்லைன்!


பாலியல் வல்லுறவுக்கு, சீண்டல்களுக்கு ஆலோசனை தந்து குழந்தைகளை மீட்கும் ஹெல்ப்லைன் எண்ணை விபச்சார சேவை எண்ணாக விளம்பரப்படுத்தி சர்ச்சை ஏற்படுத்தியிருக்கிறது வக்கிர கூட்டம் ஒன்று.

இந்திய அரசின் குழந்தைகளுக்கான உதவி எண்ணுக்கு திடீரென ‘செக்ஸ் தேவைகளுக்கு பெண்கள் கிடைக்குமா?’ என எக்கச்சக்க அழைப்புகள் வர மிரண்டுபோனது உதவி எண் குழு. உடனே இதுபற்றி மேலதிகாரிகளிடம் தெரிவிக்க புதிய எண்ணை விளம்பரப்படுத்தி பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளனர். இந்த அழைப்புகளுக்கு காரணம் என்ன? சில வக்கிரபுத்திக்காரர்கள் குழந்தைகளுக்கான உதவி தொலைபேசி எண்ணை பாலியல் தளங்களில் பதிவிட்டதுதான் காரணம் என தெரியவந்துள்ளது. “பாலியல் தளங்களில் செக்ஸ் என தலைப்பிட்டு குழந்தைகளுக்கான உதவி எண்ணை சிலர் எழுதியதுதான் இந்த தவறுக்கு காரணம். தற்போது பழைய எண்ணை இணையதளங்களிலிருந்து அகற்றும்வரை புதிய எண்ணை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளோம்” என்கிறார் தேசிய குழந்தைகள் உரிமை ஆணைய உறுப்பினரான யஷ்வந்த் ஜெயின்.