வங்கி இணைப்பு - மாற்றங்கள் இவைதான்!
வங்கி இணைப்பு - மாற்றங்கள் இவைதான்!
இந்திய அரசு, பத்து பொதுத்துறை வங்கிகளை ஒன்றிணைத்து நான்காக மாற்றத் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் அதன் வணிகம், கடன் வழங்கும் திறனை உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கைள் முழுமையடைய தோராயமாக ஓராண்டு பிடிக்கும். வங்கிகள் இணைப்பால் வங்கிகளில் வாடிக்கையாளர்களாக உள்ளவர்கள் என்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும்?
1.பயனர்களின் வங்கிக் கணக்கு எண் மாற்றப்படலாம். ஒன்றிணையும் இரு வங்கிகளில் வெவ்வேறு கணக்கு எண்களை வைத்திருப்பவர்களுக்கு, ஒரே எண் அளிக்கப்படும். தொலைபேசி எண் மேம்படுத்தும் அறிவுரை கூறப்படலாம்.
2.வங்கி கணக்கு எண், ஐஎஃப்எஸ்சி எண் ஆகியவையும் கூடுதலாக மாற்றப்படும். வங்கியில் அளிக்கப்பட்ட செக் புத்தகம், கடன்தொகை தவணை ஆகியவை மாற்றத்தைச் சந்திக்கலாம்.
3. வங்கிகள் இணைக்கப்படுவதால், வங்கிக் கிளைகள் குறைக்கப்பட வாய்ப்புள்ளது. இணைக்கப்படும் வங்கிகள் ஒரே பகுதியில் இரண்டு இருந்தால், சிறிய வங்கியின் கிளைகள் மூடப்படும். ஏடிஎம் வசதிகள் குறைக்கப்பட வாய்ப்பில்லை. முன்னர் இணைக்கப்பட்ட விஜயா, தேனா, பரோடா வங்கிகளின் ஏடிஎம்கள் இன்றும் செயற்பட்டு வருகின்றன.
4. கடன் அட்டைகள் அவை கூறப்பட்ட காலம் வரை குறிப்பிட்ட வங்கியுடையதையே பயன்படுத்தலாம். புதிய அட்டைகள் இணைக்கப்பட்ட பெரிய வங்கியின் பெயரில் வழங்கப்படும். வைப்புத்தொகை வைத்திருப்பவர்கள் புதிய வங்கிக்குத் தங்களது தொகையை மாற்றிக்கொள்ளவேண்டும். இதற்கான எழுத்துப்பூர்வ பணிகளை செய்யவேண்டி இருக்கலாம்.
5.இணைக்கப்படும் வங்கிகள் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் ஒன்றாக இருந்தால் பிரச்னையில்லை. மாறுபட்டிருந்தால் அத்தனையும் மாற்றி அமைக்கும் வேலை இருக்கிறது.
தகவல்:ET
கருத்துகள்
கருத்துரையிடுக